என்னடா இது புது டிரெண்டாக இருக்கு...பிரியங்காவை நாமினேட் செய்ய ராஜு சொன்ன அந்த ஒரு காரணம்
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த 50 நாட்களில் பல சண்டைகள், வாக்குவாதங்கள், கருத்து மோதல்கள், கண்ணீர், சென்டிமென்ட், நட்பு என பல்வேறு விதமான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
முகம் தெரியாத போட்டியாளர்களால் இந்த சீசன் போர் அடிக்க போகிறது என்ற பலரின் கருத்தை மாற்றி, சிறந்த போட்டியாளர் யார், உண்மையாக இருப்பவர் யார் என ரசிகர்கள் பலரை மாற்றி யோசிக்க வைத்துள்ளது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி.

கேப்டனான அபினய்
இன்று நடத்தப்பட்ட கேப்டன்சி டாஸ்க்கில் அபினய் வெற்றி பெற்றார். இதுவரை எல்லா வாரமும் நாமினேஷனுக்கு சென்று, காப்பாற்றப்பட்டு வந்த அபினய், இந்த வாரம் முதல் முறையாக நாமினேஷில் இடம்பெறவில்லை. அவர் இந்த வார தலைவர் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது.

நாமினேட் ஆனவர்கள்
தொடர்ந்து வரும் வாரத்தில் வெளியேற்றப்பட போகிறவரை தேர்வு செய்வதற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்பட்டது. இதில் பிரியங்கா, நிரூப், இமான் அண்ணாச்சி, தாமரை, ஐக்கி பெர்ரி, பாவ்னி ஆகிய 6 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். இவர்களில் பிரியங்கா அதிகமானவர்களால் நாமினேட் செய்யப்பட்டார்.

எதிர்ப்பை பெற்ற பிரியங்கா
இதுவரை வீட்டில் இருந்தவர்களால் பாசமானவர், ஃபன் பண்ணக் கூடியவர் என பாராட்டப்பட்ட பிரியங்கா மீது அதிகமானவர்கள் நெகட்டிவ் கருத்துக்களை காரணமாக சொல்லி நாமினேட் செய்தனர். இதனால் பிரியங்கா ஏன் இப்படி மாறி விட்டார் என ரசிகர்கள் பலர் கேட்க துவங்கி விட்டனர்.

வியக்க வைத்த ராஜு
மற்ற போட்டியாளர்கள் பிரியங்காவிற்கு எதிரான விஷயங்களை சொல்லி நாமினேட் செய்தனர். ஆனால் பிரியங்காவை நாமினேட் செய்வதற்காக ராஜு சொன்ன காரணம் பலரையும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் பட வைத்துள்ளது. இவர் ப்ளஸ் சொல்கிறாரா, மைனஸ் சொல்கிறாரா என புரியாமல் பலர் குழம்பிப் போய் பலவிதமாக கேள்வி கேட்டு வருகின்றனர்.

பிரியங்காவை நாமினேட் செய்ய காரணம்
கன்சஷன் ரூமில் பிக்பாசிடம் பேசிய ராஜு, இந்த 50 நாட்கள் முடிவில் டஃப் போட்டியாளராக பிரியங்காவை பார்க்கிறேன். ஏனெனில், பிரியங்கா என் மீது காட்டும் அக்கறை, பாசத்தால் நான் ஈர்க்கப்படுகிறேன். கேமை அவரை எதிர்த்து என்னால் விளையாட முடியுமா என தெரியவில்லை. ஒரு சின்ன விஷயத்தை அன்று நான் சொன்தற்கு அழுது விட்டார். ஒருவர் அழுது விட்டால் அதற்கு மேல் அவர்களுக்கு எதிராக என்னால் எதுவும் பேச முடியாமல் போகிறது என்றார்.

பயப்படுகிறாரா ராஜு
ராஜு பேசியதை கேட்ட நெட்டிசன்கள், இது என்னடா புது டிரெண்டா இருக்கு. எல்லோரும் எதிராக விஷயங்களை சொல்லி தான் நாமனேட் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் பிளசான விஷயங்களை சொல்லி நாமினேட் செய்துள்ளாரே. ராஜு, பிரியங்காவை பார்த்து பயப்படுகிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











