முதல் நபராக காப்பாற்றப்பட்ட ராஜு.. காமெடியாய் கருத்து சொல்வது குற்றமல்ல.. கமல் சாரே சொல்லிட்டாரு!
சென்னை: கெட்ட வார்த்தை பேசிய பஞ்சாயத்தை கையில் எடுக்க வேண்டாம் என வந்த உத்தரவால் கமல் அதனை பட்டும் படாமலும் தொட்டு விட்டு ராஜுவுக்கு புகழாராம் சூட்ட சென்று விட்டார் என்றே சனிக்கிழமை எபிசோடை பார்த்த நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
ராஜு ஜெயமோகன் தலையில் தண்ணி ஊற்றப்பட்ட நிலையில், தனது இன்னொரு முகத்தை காட்டி ராஜு சண்டை போடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்க, அதையெல்லாம் பண்ணாதீங்க ராஜு ஃபைனல்ஸ் வரை போகணும் அமைதியா இப்படி காமெடியாகவே உங்கள் கருத்துக்களை எடுத்து வைங்க என அட்வைஸ் கொடுத்து விட்டார்.
நாமினேஷன் பட்டியலில் இருந்த 7 பேரில் முதல் நபராக ராஜு சேவ் ஆனதும் பாவனியின் முகம் ஃபியூஸ் போன பல்பாக மாறியது.

தனித்துவம் இல்லாமல்
முகத்துக்கு நேராக சிபி, அக்ஷரா போல ராஜு ஆபாச வார்த்தைகளை பேசி ராஜு ஜெயமோகன் சண்டை போடவில்லை என்பதற்காக அவருக்கு தனித்துவம் இல்லை என முத்திரை குத்தி தண்ணி தெளித்து விட்டனர். ராஜு ஜெயமோகன் முகத்துக்கு நேரா பல முறை பாவனியை பஞ்சர் பண்ணதால் தான் அவர் முகமே அப்படி வாடி போயிருப்பதை ஏன் யாருமே நோட் பண்ணல என்பது தான் கேள்வியாக உள்ளது. கமல் சாரும் ராஜு மற்றும் பாவனி பஞ்சாயத்தை பேசவே இல்லை என்பது கூடுதல் தகவல்.

ராஜுவை புரமோட் செய்ய
பழிவாங்கும் நடவடிக்கையாகவே ராஜு ஜெயமோகனுக்கு மோசமான விருதுகளும் அந்த தண்ணி ஊற்றும் தண்டனையும் கொடுக்கப்பட்டது என ராஜு ரசிகர்கள் சொல்ல அதெல்லாம் இல்லைப்பா அடுத்த ஆரியாக ராஜுவை புரமோட் செய்ய விஜய் டிவி போட்ட நாடகம் தான் என ராஜுவின் ஹேட்டர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பழிவாங்க பண்ணீங்களா
ராஜு பற்றி பின்னால் அவ்வளவு பேசும் பாவனி கமல் சார் கேட்கும் போது சேஃப் கேம் ஆடுவது போல எனக்கு ஒண்ணும் தெரியாது சார் என்பது போல மழுப்பி விட்டார். இசைவாணிக்கு கேமே ஆட தெரியவில்லை என அதட்டி அமர வைத்த ஆண்டவர் தாமரை செல்வி பேசும் போது பழிவாங்க பண்ணீங்களா என ஒரே போடாக போட ராஜுவின் மவுசு இன்னமும் அதிகமாக கூடி விட்டது.

கமல் சாரே சொல்லிட்டாரு
ராஜு எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை என்பதை நான் ஏற்கமாட்டேன் எனக் கூறிய கமல் காமெடியாய் உங்கள் கருத்தை எப்போதுமே முன் வைத்து வருகிறீர்கள். இனியும் அதனை தொடருங்கள்.. எனக் கூறி விட்டு உள்ளே என்ன நினைக்கிறாங்க என்பது முக்கியமல்ல வெளியே அவங்க என்ன நினைக்கிறாங்க என்பது தான் முக்கியம். அதன் வெளிப்பாடாகவே ராஜு முதல் நபராக சேவ் ஆனார் எனக் கூறிய கமல் அண்ணாச்சி கதி என்ன ஆச்சுன்னு நாளைக்கு பார்க்கலாம் என்று கிளம்பி விட்டார்.

பாவம் பாவனி
ராஜு ஜெயமோகன் சேவ் ஆனதும் இமான் அண்ணாச்சி, நிரூப், வருண், ஐக்கி பெர்ரி, அக்ஷரா உள்ளிட்ட போட்டியாளர்கள் அவரை கட்டியணைத்து பாராட்டினார்கள். ஆனால், நம்ம பிக் பாஸ் எடிட்டர் பாவனியின் ரியாக்ஷன்களை மட்டும் எடுத்துப் போட்டு வேற லெவல் பண்ணிட்டாரு.. இதற்குத்தான் இன்னைக்கு பாவனி அதிக மேக்கப் போட்டு வரலையோ? என்கிற கேள்வியும் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











