முத்து படத்துல வர்றது எங்க தாத்தா...என் நிலைமை இப்படி ஆகிடுச்சே...புலம்பும் ராஜு

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 15 நாட்களை கடந்து விட்டது. 15 வது நாளான நேற்று, இந்த வாரத்திற்கான தலைவரை தேர்வு செய்யும் போட்டி மற்றும் வரும் வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் ஆகியன நடத்தப்பட்டன.

கடந்த வாரம் எலிமினேஷனுக்காக 15 பேர் தேர்வான நிலையில், இந்த வாரம் 9 பேர் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகி உள்ளனர். தலைவருக்கான டாஸ்கில், சில குழப்பங்கள், மோதல்கள், உரசல்கள் ஆகியவற்றிற்கு இடையே சிபி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

டீமை மாற்றி சிபி

டீமை மாற்றி சிபி

இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிபி, குக்கிங், க்ளீனிங், பாத்திரம் கழுவுவதற்கான டீம்களை மாற்றி அமைத்தார். இதில் ராஜுவை பாத்ரூம் கழுவும் டீமில் இருந்து, வீட்டை சுத்தம் செய்யும் டீமுக்கு மாற்றினார். இதனையடுத்து இரவு அனைவரும் தூங்க சென்ற நேரத்தில் அறைகளை பெருக்கிக் கொண்டிருந்தார் ராஜு.

அவர் எங்க தாத்தா

அவர் எங்க தாத்தா

பெண்கள் அறையை சுத்தம் செய்கையில், தாமரை மற்றும் சின்ன பொண்ணிடம் காமெடியாக பேசிக் கொண்டே கூட்டினார் ராஜு. அப்போது, முத்து படத்தில் தங்க காசுகளை அள்ளி அள்ளி கொடுப்பாரே அவர் எங்க தாத்தா தான். அப்பேர்பட்ட ராஜ பரம்பரையை இப்படி வீடு கூட்ட விட்டுட்டானுங்களே என புலம்பினார். அவர் புலம்புவதைக் கேட்டு தாமரையும், சின்ன பொண்ணும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

புலம்பிய ராஜு

புலம்பிய ராஜு

கடந்த வாரம் பாத்ரூம் கழுவ விட்டாங்க என்றார் தாமரை. அதற்கு ராஜு, அது கூட பரவாயில்ல அக்கா இரண்டு ரூம் தான். இது இவ்வளவு பெரிய வீடா இருக்கு. இத நான் கூட்டுனேன்னு சொன்னா எவனும் நம்ப மாட்டானுங்க. கூட்ட கூட்ட குப்பைய வேற போட்டுட்டு போறானுங்க. எப்படி இருந்த என்னைய இப்படி வீடு கூட்ட விட்டுட்டானுங்களே என புலம்பினார்.

ரசிகர்களை கவர்ந்த ராஜு

ரசிகர்களை கவர்ந்த ராஜு

ராஜு பாவம் போல் புலம்புதை கேட்டு, தாமரை, சின்ன பொண்ணு, சுருதி ஆகியோர் பயங்கரமாக சிரித்தனர். நேற்று தலைவரை தேர்வு செய்வதற்கான டாஸ்கின் போது அபிஷேக் மற்றும் நிரூப் ஆகியோர் பெண்களின் உடைகளை அணிந்து கொண்டு வந்து செய்த அலம்பல், இசைவாணியை டார்கெட் செய்து அபிஷேக் பேசியது ஆகியவற்றால் ரசிகர்கள் வெறுத்து போயிருந்த நிலையில், ராஜுவின் இந்த காமெடி புலம்பல் அனைவரையும் ரசிக்க வைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X