கிவ் எ குட் ஃபைட்.. முத்த மழைக்கு நடுவே ராஜுவின் வெற்றிக்கான தாரக மந்திரத்தை சொன்ன தாரிகா!
சென்னை: கடந்த சீசனில் ரியோவின் மனைவி வரும் போது எப்படியொரு ரொமான்ஸ் இருந்ததோ அந்த அளவுக்கு ராஜுவின் மனைவி வரும் போது ஒரு சூப்பர் ரொமான்ஸ் காட்சி பிக் பாஸ் வீட்டில் அரங்கேறியது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வார ஃப்ரீஸ் டாஸ் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒரு வாரம் குவாரண்டினில் இருந்து பிக் பாஸ் வீட்டுக்கு வருகை தருகின்றனர்.
அக்ஷராவின் குடும்பம், சிபியின் குடும்பம், நிரூப்பின் அப்பாவை தொடர்ந்து ராஜு ஜெயமோகனின் மனைவி மற்றும் அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

முத்த மழை
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ஐ கலகலப்பாக கொண்டு செல்லும் ராஜு ஜெயமோகனின் மனைவி தாரிகா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஓடிச் சென்று கட்டியணைத்து முத்த மழை பெய்து விட்டார் ராஜு. அங்கே ஆரம்பித்தது கடைசியாக அவர் வெளியேறும் வரை ஒரே முத்த சத்தம் தான்.

அந்த தப்பை பண்ணாத
ராஜு நீ சிறப்பாகவே விளையாடுகிறாய் என்று மட்டுமே சொல்லி விட்டு செல்லாமல், ராஜுவிடம் இருக்கும் சில குறைகளையும் அவரது மனைவி தாரிகா சுட்டிக் காட்டியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. நட்பு, பாசம் என உறவில் சிக்கிக் கொண்டு மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்காதே என சூப்பர் அட்வைஸ் கொடுத்தார்.

கிவ் எ குட் ஃபைட்
மேலும், பிசிக்கல் டாஸ்க்கில் எல்லாம் எளிதில் விட்டுக் கொடுத்து விட்டு சென்று விடாதே கடைசி வரை போராடு என்றும் கிவ் எ குட் ஃபைட் என்றும் தாரிகா சொல்ல சொல்ல ரசிகர்கள் மனதில் இருப்பதை அப்படியே சொல்றாங்களே என சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகளை போட்டு தாக்கி வருகின்றனர்.

செம ரொமான்ஸ்
எந்தளவுக்கு அட்வைஸ் இருந்ததோ அதே அளவுக்கு அந்த கொஞ்ச நேரத்தில் வேற லெவல் ரொமான்ஸும் வீட்டுக்குள் இழையோடியது. இமான் அண்ணாச்சியின் வெளியேற்றத்தால் ராஜு உடைந்து போயுள்ளார் என்பதை புரிந்து கொண்டு அதில் இருந்து மீண்டு வந்து உன்னுடைய கேமை விளையாடு என்றும் தாரிகா ராஜுவின் வெற்றிக்கான தாரக மந்திரத்தை சொல்லிவிட்டு சென்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











