தோழனாக பழகினால் தென்றல்.. எதிரியா பழகினால் புயல்.. அசால்டா மிரட்டிய ராஜு பாய்!

சென்னை : பிக் பாஸ் வீட்டின் 18வது நாளான இன்று பஞ்சதந்திரம் டாஸ்க் முடிச்சி அப்பாடா இன்றைக்காவது நைட் நல்லா தூங்கலாம் என்ற மகிழ்ச்சியி

ல் போட்டியாளர்கள் உள்ளனர்.

வழக்கமாக ஹவுஸ்மெட்ஸ்களிடையே கொளுத்திப்போடும் பிக் பாஸ், இந்த முறையும் பஞ்சபூதம் குறித்த டாஸ்க் ஒன்றை அறிவிக்கிறார்.

டாஸ்க் நேம், குணம் எது, குறை எது... நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த பஞ்சபூத ஆற்றலில் எந்த குணம் உங்களிடம் மேலோக்கி இருக்கிறதோ அதை மற்ற ஹவுஸ்மெட்ஸ்களிடம் கூற வேண்டும், இதுபோல போட்டியாளர்களிடம் எந்த குணம் குறையாக உங்களுக்கு இருக்கிறதோ அதை சொல்ல வேண்டும்.

நான் ஒரு ஆகாயம்

நான் ஒரு ஆகாயம்

முதலாவது ஆளாக வந்த ரிவ்யூ மன்னன் அபிஷேக், தன்னை ஒரு ஆகாசமாக பார்ப்பதாக கூறினார். ஏன் என்றால், என்னுடைய உற்சாகத்திற்கு லிமிட்டே கிடையாது என்றார். மேலும் பேசிய அவர் நிரூப்பை நான் நெருப்பா பார்க்கிறேன், நெருப்பை கொஞ்ச முடியாது சுட்டுவிடும் என்றார்.

நான் நெருப்பு

நான் நெருப்பு

அடுத்து பேசிய இமான் அண்ணாச்சி என்னை, நான் நெருப்பு என்று சொல்லுவேன். ஏன் என்றால் என்னை எப்படி வேணும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். மேலும், அபிஷேக்கை நான் நெருப்பாக பார்க்கிறேன் ஏன் என்றால் அவர் கொளுத்திப்போடுகிறார் என்று அவரை குறை கூறினார்

எதிரியா பழகினால் புயல்

எதிரியா பழகினால் புயல்

இதையடுத்து பேசிய ராஜு, நான் என்னை எல்லாமாகவும் பார்க்கிறேன் என்றார். ஏன் என்றால் என்னிடம் எல்லா குணமும் இருக்கு , ஆனால் என்னிடம் அதிகமாக இருக்கும் குணம் காற்று என்றார். ஏன் என்றால், தோழனாக பழகினால் தென்றால், எதிரியா பழகினால் புயல், வேறுவிதமாக என்னிடம் நடந்து கொண்டால் சூறாவளி என்றார்.

அளவா யூஸ் பண்ணுங்க

அளவா யூஸ் பண்ணுங்க

என்னை கொஞ்சம் அளவா யூஸ் பண்ணா உங்களுக்கு நல்லது... இல்ல நிறைய நெருக்கமா இருக்கனும் நினைச்சீங்கனா மூச்சு திணறிவிடும். அதனால என்னை பாத்து நியூஸ் பண்ணுங்க என்று, வழக்கமா அவர் பேசும் நகைச்சுவை உணர்வுடன் பேசினார்.

பிரியங்கா நெருப்பு

பிரியங்கா நெருப்பு

மேலும், பேசிய ராஜு பிரியங்காவை நெருப்பு என்று குறை கூறினார், முதன் முதலில் மனிதன் கண்டுபிடித்த ஒரு விஷயம் நெருப்பு, அதன் பிறகு தான் புரட்சி ஆரம்பமானது. நெருப்பு பொறி கிளம்பி பற்றிக்கொண்டால் எரிந்து சாகவேண்டியது தான். நெருப்பு ஒரு ஆபத்தான விஷயம். இதனால் நெருப்பு நாம் பார்த்து பயன்படுத்த வேண்டும் என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பிரியங்காவை பங்கமாக கலாய்த்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X