சூப்பர் டீலக்ஸ் பார்த்துவிட்டு இயக்குநருக்கு முத்தம் கொடுக்க விரும்பும் பிரபலம்
Recommended Video

சென்னை: சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்த இயக்குநர் ராஜு முருகன் அந்த படக்குழுவை பாராட்டியுள்ளார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர். தி நியூ யார்க் டைம்ஸ் அமெரிக்க நாளிதழ் கூட படத்தை பாராட்டி செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் ஜோக்கர் படம் புகழ் இயக்குநர் ராஜு முருகன் சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

'சூப்பர் டீலக்ஸ்' பார்த்தேன். படம் நெடுக அசாத்தியமான காட்சிகள். மனித மன ஆழங்களின் அன்பை, குரூரத்தை, காமத்தை, கடவுளை பிரமாதமான திரைமொழியில் பேசுகிறது படம். உலக தரமான உருவாக்கம். நண்பன் தியாகராஜன் குமாரராஜாவுக்கு முத்தங்கள்.
அவ்வளவு சின்சியராக உழைத்திருக்கும் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ஃபகத் பாசில், அந்த குட்டி பையன் அஷ்வந்த், யுவனின் இசை, P.S. வினோத், நீரவ் ஷாவின் ஒளிக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்..! என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











