இதுக்குமேல ’கட்’ செய்ய முடியாது.. தணிக்கை தீர்பாயத்திடம் போராடிய ராஜுமுருகன்!

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி திரைப்படத்திற்கு தணிக்கை தீர்ப்பாயம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சென்னை: கம்யூனிச சித்தாந்தங்கள் மற்றும் அரசு அதிகாரங்களை கேள்வி கேட்கும் வகையில் உருவாகியிருக்கும் ஜிப்ஸி படத்திற்கு தணிக்கை குழு இரு முறை சான்றிதழ் வழங்க மறுத்தது.

இதனால், தீர்ப்பாயத்திடம் சென்ற ஜிப்ஸி திரைப்படத்திற்கு, சில 'கட்'களுடன் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஜீவா, நடாஷா சிங் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வெரி வெரி பேட்

வெரி வெரி பேட்

குக்கூ, ஜோக்கர் படங்களை தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடிய வெரி வெரி பேட் பாடல் காட்சிகள் முன்னதாக வெளியாகி இருந்தன.

அந்த பாடலில், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பியூஷ் மானுஷ் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் நடித்திருந்தனர்.

ஜோக்கர் படத்தில் இடம்பெற்றிருந்த என்னங்க சார் உங்க சட்டம் பாடலை தொடர்ந்து அடுத்த அதிரடி பாடலாக வெரி வெரி பேட் உருவாகியிருந்தது.

தணிக்கை பிரச்சனை

தணிக்கை பிரச்சனை

தமிழ் சினிமாவில் தணிக்கை குழு சான்று மறுக்கப்படும் படங்கள் மிக மிக குறைவு என்றே சொல்லலாம். ஆனால், ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்திற்கு தணிக்கை குழு இரு முறை தணிக்கை சான்று வழங்க மறுத்துள்ளது. இந்நிலையில், தணிக்கை தீர்பாயத்திடம் படத்திற்கு சான்று வழங்க ராஜுமுருகன் வைத்த கோரிக்கையை ஏற்று தீர்ப்பாயம் சான்று வழங்கியுள்ளது.

அரசியல்

அரசியல்

குக்கு படத்தை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கிய ஜோக்கர் படம் நேரடியாக நிகழ்கால அரசியலை விமர்சிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. அந்த படத்திற்கே பல எதிர்ப்புகள் கிளம்பிய போதும், ஜோக்கர் படம் தேசிய விருதினை வென்றது. ஆனால், இந்த முறை ஜிப்ஸி திரைப்படத்தில், அரசியல், மதம் என பலவற்றை அசைத்துப்பார்த்துள்ளார் ராஜுமுருகன். மேலும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற சித்தரிப்பு காட்சிகள் படத்தில் இருந்ததால், படத்திற்கு தணிக்கை சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

ஏ சர்டிபிகேட்

ஏ சர்டிபிகேட்

ஜீவா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. நடிகை கெளதமி தலைமையிலான தணிக்கை தீர்ப்பாயம், சென்னையில் ஜிப்ஸி படத்தை பார்த்து, இறுதியாக சில காட்சிகளை நீக்கியே ஆக வேண்டும் என்று கூறியது. அதுவரை எந்தவொரு காட்சியையும் நீக்க முடியாது என போராடி வந்த ராஜுமுருகன் இறுதியாக சில காட்சிகளை மட்டும் நீக்க ஒப்புக் கொண்டார். அதனை தொடர்ந்து ஜிப்ஸி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த மாதத்திலே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X