twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜுமுருகன் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும்.. இப்படி அழைப்பது யார் தெரியுமா?

    ராஜுமுருகன் அரசியலுக்கு வரவேண்டும் என கரு.பழனியப்பன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    |

    சென்னை: ராஜுமுருகன் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என இயக்குனர் கரு.பழனியப்பன் கூறினார்.

    ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா நடித்துள்ள படம் ஜிப்ஸி. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

     Rajumurugan should become a legislator soon: Karu.Pazhaniappan

    ஜிப்ஸி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது. இதில் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

    சமூக போராளிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும்... ஜிப்ஸி ஜீவாவின் ஆசை! சமூக போராளிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும்... ஜிப்ஸி ஜீவாவின் ஆசை!

    இவ்விழாவில் பேசிய இயக்குனர் கரு.பழனியப்பன், ராஜுமுருகன் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்றார்.

     Rajumurugan should become a legislator soon: Karu.Pazhaniappan

    இதுகுறித்து அவர் பேசியதாவது, " ராஜு முருகன் யுகபாரதிக்கு எப்படி ஒரு தம்பியோ அதுபோல் என்னைப் போல பலபேருக்கு அவர் தம்பி. ஜீவா, இசை அமைப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    இந்த படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் பெரிதாக ஜெயிக்க வெண்டும். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். ஒரு பையனுக்கு ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்டது. நான் தயங்கி கேட்டேன். ஆனால் அதை செய்து கொடுத்தார். நான் ஆஸ்பிட்டல் போகும் முன்பே அவர் அங்கிருந்தார்.

    முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் இப்படியான உதவிகளால் தான் இன்னும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். மக்கள் மீது எப்படி ஈடுபாட்டோடு இருப்பாரோ அப்படித்தான் அவர் படங்களும் இருக்கும்.

    ராஜு முருகன் எங்கு சென்றாலும் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார். அதனால் அவரும் விரைவில் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துகிறேன்" என்றார்

    English summary
    While speaking in the audio launch function of Gypsy, director Karu.Pazhaniappan said that Rajuamurugan should enter politics soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X