OTT யில் வெளியிட இறுதி கட்ட நடவடிக்கைகளை நடத்தி வருகிறதா ராக்கி படக்குழு!?
சென்னை: நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் 'ராக்கி'.
இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். டர்புக்கா சிவா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் கூடிய விரைவில் OTT யில் ரிலீஸ் ஆகவுள்ளது என தகவல்கள் பரவி வருகின்றன.

எதிர்பார்ப்பில் படங்கள்
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நெற்றிக்கண், ராக்கி, கூழாங்கல் ஆகிய படங்கள் ரிலீசுக்கு காத்துள்ளன. கூழாங்கல் சமீபத்தில் Film Festival லில் Screening செய்யப்பட்டு பலரின் பாராட்டுகளை அள்ளியது.
ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து வெளிவரவுள்ள படங்கள் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

வசந்த் ரவி - பாரதிராஜா
ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் குறிப்பாக ராக்கி படத்தின் மீது எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த படத்தினை முன்னரே இயக்கி முடித்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் செல்வராகவனை வைத்து அடுத்த படத்தையே தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் ராக்கி நிலுவையில் உள்ளது.

கொலை நடுங்க வைக்கும்
ராக்கி படத்தின் முதல் ட்ரைலர் கடந்த வருடமும், சமீபத்தில் வெளியான இரண்டாவது ட்ரைலரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இரண்டிலும் ரசிகர்களை கொலை நடுங்க வைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ரத்தம் தெறிக்கும் காட்சிகள் படத்தில் நிறைந்துள்ளது போல் தெரிகிறது.
Recommended Video

OTT வெளியீடு
தற்போது கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதை கருத்திற்கொண்டு ராக்கி படக்குழு படத்தை OTT யில் வெளியிட இறுதி கட்ட நடவடிக்கைகளை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூடிய விரைவில் படக்குழு வெளியிடவுள்ளது.


Click it and Unblock the Notifications











