இந்த நடிகை நிர்வாணமாக திருமணம் செய்யப் போகிறாராம்: என்ன கருமம்டா இது
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தின் பேட்டியை பார்த்தவர்கள் குழம்பியுள்ளனர்.
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தீபக் கலால் என்பவரை திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அவர்களின் திருமண பத்திரிகை கூட வெளியாகியுள்ளது. ஆனால் இது ராக்கி நடத்தும் நாடகம் என்று தான் அனைவரும் நினைக்கிறார்கள். அவர்களின் திருமணம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறதாம்.
இது உண்மையான கல்யாணம் என்று யாரும் நம்பவில்லை. இந்நிலையில் இது குறித்து ராக்கி, தீபக் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

விமானம்
என் திருமணத்திற்கு வரும் பெரிய ஆட்களுக்காக மெக்டொனால்டு டிரம்ப் நான்கு விமானங்களை அளித்துள்ளார். டிரம்ப் எனக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க கொடி அடங்கிய புடவையை பரிசளித்தார் என்றார் ராக்கி. (பொய் சொல்வதற்கும் ஒரு அளவே இல்லாமல் போச்சே)

குத்தாட்டம்
நான் டிவியில் ராக்கி சாவந்தின் குத்தாட்டப் பாடல்களை பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் அவரே என் மனைவியாக வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. நான் ராக்கியை காதலிக்கிறேன் என்று தீபக் தெரிவித்தார். அவர் பேசியது மிகவும் செயற்கையாக இருந்தது. இருவரும் சேர்ந்து பப்ளிசிட்டி தேட நாடகம் நடத்துகிறார்கள் என்றே கருதப்படுகிறது.

தீபிகா
தீபிகா படுகோனே தனது திருமணத்தின்போது ரூ. 1 கோடி மதிப்புள்ள லெஹங்கா அணிந்தாராம். நான் ரூ. 8 கோடி மதிப்புள்ள லெஹங்கா அணிவேன். என் திருமண வரவேற்புக்கு ஷாருக்கான், சல்மான் கான், கரீனா மற்றும் தீபிகாவை அழைத்துள்ளேன். திருமணத்திற்கு பிறகு நானும், தீபக்கும் சகோதரர், சகோதரியாக வாழ்வோம் என்று ராக்கி கூறினார்.

உடை
எங்களின் திருமணம் நிர்வாண திருமணம். நாங்கள் உடைக்கு செலவு செய்யாமல் அதற்கான பணத்தை ஏழை மக்களுக்கு கொடுப்போம். மக்களுக்கு ஐபோன் பரிசளிப்போம் என்றார் தீபக். தீபிக், ராக்கி பேசியதை கேட்டவர்கள் இவர்கள் லூசா இல்லை லூசு மாதிரி நடிக்கிறார்களா என்று தான் நினைத்தார்கள்.


Click it and Unblock the Notifications











