ராக்கி ரிலிஸ் எப்போது!?.. ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்
சென்னை: நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் 'ராக்கி'.
இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். டர்புக்கா சிவா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ரிலிஸ் தேதி குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உதவி இயக்குநர்
2011ம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை வென்ற ஆரண்ய காண்டம் படத்தில் உதவி இயக்குனராகவும், சுதா கொங்காராவின் இறுதி சுற்று படத்தில் டயலாக் போர்ஷனை எழுதிய இயக்குனராகவும் பணிபுரிந்தவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

வித்தியாசமான ட்ரைலர்
அதைத்தொடர்ந்து தரமணி படத்தில் நடித்து புகழ்பெற்ற வசந்த் ரவி & இயக்குனர் பாரதிராஜாவை வைத்து ராக்கி படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தின் முதல் ட்ரைலர் கடந்த வருடமும், சமீபத்தில் வெளியான இரண்டாவது ட்ரைலரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

மிரட்டலான போஸ்டர்
இதற்கிடையில் இயக்குனர் செல்வராகவன், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து சாணிக் காயிதம் படத்தை இயக்க முடிவு செய்து, சமீபத்தில் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினார் அருண் மாதேஸ்வரன். செல்வராகவனின் மிரட்டலான போஸ்டர் கடந்த மார்ச் 5ம் தேதி வெளியாகி ரசிகர்களை மெருகேற்றியது.

ரசிகர்கள் விருப்பம்
படத்தின் ட்ரைலர்கள் வெளியாகி ஒரு புறம் எதிர்பார்ப்பை எகிற வைக்க ரிலிஸ் தேதி குறித்து எந்த வித அறிவிப்பும் தெரிவிக்காமல் படக்குழு அமைதி காக்கிறது. கூடிய விரைவில் இது குறித்த அறிவுப்பு வெளியாக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











