போதையில் மயங்கிவிட்டார்: விஷால் ஹீரோயின் மீது நடிகை பரபர புகார்
மும்பை: நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள தனுஸ்ரீ தத்தாவை நடிகை ராக்கி சாவந்த் விளாசியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நானா தனுஸ்ரீக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து நடிகை ராக்கி சாவந்த் பேட்டி அளித்துள்ளார்.

பிரச்சனை
ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டபோது நானா படேகர் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக தனுஸ்ரீ புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். தனுஸ்ரீக்கு பதில் ராக்கி சாவந்த் குத்தாட்டம் போட்டார். இந்நிலையில் தனுஸ்ரீயை ராக்கி விளாசியுள்ளார்.

ராக்கி
ஒரு நாள் மாலை டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா எனக்கு போன் செய்து செட்டுக்கு வருமாறு கூறினார். நானா படேகரும் போன் செய்து அழைத்தார். அங்கு சென்றால் ஒரே கூட்டமாக இருந்தது. என்னவென்று விசாரித்தால் பாடலுக்கு ஆட வேண்டிய தனுஸ்ரீ கேரவனுக்குள் சென்று வெளியே வரவில்லை என்றார்கள் என ராக்கி தெரிவித்துள்ளார்.

மயக்கம்
எனக்கு தனுஸ்ரீ மற்றும் அவரின் ஹேர் ஸ்டைலிஸ்டை நன்கு தெரியும். அதனால் நான் தனுவுக்கு போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை. அதன் பிறகு அவரின் மேக்கப் குழுவிடம் கேட்டதற்கு, அவர் 3, 4 மணிநேரமாக மயக்கமாக இருப்பதாக கூறினார்கள். அதிக அளவில் போதைப் பொருள் உட்கொண்டு அவர் மயங்கியது தெரிந்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்கிறார் ராக்கி.

அம்மா
ராக்கி சாவந்த் சொல்வது போன்று தனுஸ்ரீ போதையில் இல்லை என்று அந்த செட்டில் இருந்த நடிகை டெய்சி ஷா தெரிவித்துள்ளார். தனுஸ்ரீ தனது அம்மாவுடன் படப்பிடிப்புக்கு வந்திருந்தார். யாராவது அம்மாவுக்கு முன்பு போதைப் பொருள் பயன்படுத்தி மயக்கம் போடுவார்களா என்று டெய்சி ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

விளம்பரம்
ராக்கி சாவந்த் ஒரு விளம்பர பிரியை என்று பாலிவுட்காரர்கள் நினைக்கிறார்கள். அதனால் அவர் தனுஸ்ரீ பற்றி பேசியதை நம்ப யாரும் தயாராக இல்லை. இந்த வாய்ப்பை கூட பயன்படுத்தி விளம்பரம் தேடுகிறாரே என்று தான் விமர்சித்துள்ளனர். தன்னை பற்றி தவறாக பேசிய ராக்கி சாவந்தை தனுஸ்ரீ விளாசியுள்ளார். எனக்கு பதில் ஆடியதை தவிர என்ன செய்தார் அவர். தற்போது என்னை பற்றி ஏதேதோ பேசுகிறார் என்கிறார் தனுஸ்ரீ.


Click it and Unblock the Notifications











