ஆடும்போதே கிழிஞ்ச ஜாக்கெட்..டென்ஷனான பிரபல நடிகை!
மும்பை: சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்.
அரைகுறை ஆடை , ஆபாச ஆட்டம், கவர்ச்சி புகைப்படம் என எப்போதும் சர்ச்சையில் சிக்குவார்.
தற்போது , அவர் அணிந்த ஜாக்கெட்டும் படப்பிடிப்பின் போது கிழிந்து பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

நடனக்கலைஞர்
ராக்கி சாவந்த் என்றால் பாலிவுட்டில் மிகவும் பிரபலம். இவர், நடனக்கலைஞராகவும், இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் கன்னடம், மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

அடிக்கடி சர்ச்சை
ராக்கி ராவந்த், தமிழில் என் சகியே,முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் இவர், ஆண் நண்பருக்கு பொது இடத்தில் முத்தம் கொடுப்பது, அரைகுறை ஆடை, ஆபாச ஆட்டம், எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவார்.

கண்ணீர் மல்க பேசினார்
இவர், சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த நிகழ்ச்சியில் தனது வாழ்க்கை பற்றியும், என்னை பலர் விமர்சிப்பது பற்றியும் கண்ணீர் மல்க பேசினார். என்னை பற்றி மோசமாக பேசியவர்களை நான் மன்னித்துவிட்டேன் என்று பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.

ஜாக்கெட் கிழிந்தது
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஜாக்கெட் கிழிந்தது இதனால் மிகவும் அவமானமடைந்த ராக்கி டென்ஷனாகி ஊழியர்களை திட்ட ஆரம்பித்துவிட்டார். என்ன லட்சணத்தில் ஜாக்கெட் தைத்திருக்கிறீர்கள். ஆடுவதற்குள் ஆடை கிழிந்துவிட்டது. ஊக்கு போட்டுக்கொண்டு எப்படி ஆடுவது? எனக்காக மொத்த செட்டும் காத்துக்கொண்டு இருக்கு என்று கூறியுள்ளார். அவர் கோவமாக பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











