பாஜக அழைப்பு நிராகரிப்பு... கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் மும்பையில் சுயேட்சையாக போட்டி
மும்பை: பிரபல கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த வடமேற்கு மும்பை லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
சுயம்வரம் நடத்தி மணமகனைத் தேர்வு செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் சர்ச்சைகளில் சிக்கி மேலும் பிரபலமடைந்தவர் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்.
சமீபத்தில் இவருக்கு பாரதீய ஜனதா கட்சியிலிருந்து லோக்சபா தேர்தலில் களமிறங்கும் வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் அதனை நிராகரித்த ராக்கி சாவந்த் தற்போது வடமேற்கு மும்பை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் கூறியதாவது:-

மக்கள் விருப்பம்...
லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து என்னை வற்புறுத்தியதால், போட்டியிட சம்மதித்தேன்.

மும்பையில் சுயேட்சையாக....
வடமேற்கு மும்பை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து உள்ளேன்.

பாஜக அழைப்பு....
பா.ஜனதா கட்சியினர் என்னை அழைத்து, மேற்கு வங்க மாநிலம் சீராம்பூர் தொகுதியில் போட்டியிட சீட் தருவதாக கூறினார்கள்.

நான் ஏன் போட்டியிட வேண்டும்?
நான் மும்பையை சேர்ந்தவள். எனக்கு இந்தி மற்றும் மராத்தி தான் தெரியும். மேற்கு வங்க மாநிலத்தில் பேசப்படும் உள்ளூர் மொழி எனக்கு தெரியாது. அப்படி இருக்கும்போது நான் ஏன் அங்கு போட்டியிட வேண்டும்?

ஒரு வாய்ப்பு தாருங்கள்....
இந்த முறை எனக்கு ஒரு வாய்ப்பளித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். பிறகு பாருங்கள் நான் மக்களுக்கு என்ன செய்ய இருக்கிறேன் என்று..' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 17ம் தேதி...
மராட்டியத்தில் வரும் ஏப்ரல் 17-ந் தேதி நடைபெற உள்ள 19 தொகுதிகளுக்கான தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











