ஹை ஜாலி.. எனக்கு விவாகரத்து ஆகிடுச்சு..குஷியில் ஆட்டம் போட்ட நடிகை!
மும்பை: சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட் நடிகை தனது விவாகரத்தை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி உள்ளார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ராக்கி சாவந்த், தமிழில் என் சகியே, முத்திரை, கம்பீரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
ஓவராக கவர்ச்சி காட்டும் ராக்கி சாவந்த், தனது இன்ஸ்டாகிராம் பாலோவர்களை அதிகரிக்க கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

காதல் திருமணம்: நடிகை ராக்கி சாவந்த் ஆதில் துரானி என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது கணவர் ஆதில், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது வங்கியில் இருந்த பணத்தை தனக்கு தெரியாமல் எடுத்துவிட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
வேறு பெண்ணுடன் தொடர்பு: இதையடுத்து, போலீசார் ஆதில் துரானியை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஆதில், தனது நிர்வாண வீடியோவை பணத்திற்காக விற்றுவிட்டதாகவும், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அடுக்கடுக்கான பகீர் குற்றச்சாட்டை ஆதில் துரானி மீது கூறியிருந்தார்.

ஹை ஜாலி: மேலும், ஆதில் துரானியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருந்த ராக்கி சாவந்த்திற்கு நீதிமன்றம் தற்போது விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சியில் நடிகை ராக்கி சாவந்த் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி உள்ளார். மணப்பெண்போல அலங்கரித்துக்கொண்டு எனக்கு விவாகரத்து கிடைத்துவிட்டது என்று மேளதாளத்துடன் நட்ட நடு ரோட்டில் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விவாகரத்து போட்டோ ஷுட்: சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடரில் நடித்து பிரபலமானவர் ஷாலினி விவாகரத்து பெற்றதைக் கொண்டாடும் விதமாக போட்டோ ஷுட் நடத்தியிருந்தார். அது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது இந்த நடிகை விவாகரத்தானதை மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார்.


Click it and Unblock the Notifications











