twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    100 பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கிய 'சி.எம்.' ஆக ஆசைப்படும் நடிகை ராக்கி சாவந்த்

    By Siva
    |

    மும்பை: ஆவாஸ் பவுன்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தி நடிகை ராக்கி சாவந்த் 100 தையல் எந்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    இந்தி நடிகை ராக்கி சாவந்தின் பெயரைக் கூறினால் பாலிவுட்டில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?. ஓ, அந்த மோட்டார் வாயா என்று தான் கூறுகிறார்கள். காரணம் அவர் படபடவென பேசுவது தான்.

    நடிப்பில் இருந்து அரசியலுக்கு தாவினார் ராக்கி.

    ஆம் கட்சி

    ஆம் கட்சி

    ராஷ்ட்ரிய ஆம் கட்சி என்ற ஒன்றை துவங்கி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மண்ணை கவ்வினார் ராக்கி சாவந்த்.

    கட்சி தாவல்

    கட்சி தாவல்

    தேர்தல் தோல்வியை அடுத்து கட்சியை கலைத்த ராக்கி அரசியலில் நீடிக்க இந்திய குடியரசுக் கட்சியில் சேர்ந்துவிட்டார். தற்போது அவருக்கு மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஆகும் ஆசை வந்துள்ளது.

    அரசியல்

    அரசியல்

    சினிமாவில் தான் பெரிய ஆளாக முடியவில்லை அரசியலில் ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்று ராக்கியும் தன்னால் முடிந்தவற்றை எல்லாம் செய்கிறார்.

    தையல் எந்திரங்கள்

    தையல் எந்திரங்கள்

    ஆவாஸ் பவுன்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ராக்கி கலந்து கொண்டு 100 பெண்களுக்கு தையல் எந்திரங்களை வழங்கினார்.

    உதவி

    உதவி

    மும்பை பெண்களுக்கு என்னால் உதவ முடிந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த விழாவுக்கு வந்துள்ள விதவை பெண்கள் என் தாய் மற்றும் சதோதரி போன்றவர்கள். அவர்களுக்கு தையல் எந்திரங்களை வழங்கியுள்ளோம் என்று பேசினார் ராக்கி.

    பெண்கள் முன்னேற்றம்

    பெண்கள் முன்னேற்றம்

    தையல் எந்திரம் வழங்கும் விழாவில் ராக்கி பெண்கள் முன்னேற்றம், ஆண்களுக்கு இணையாக பெண்களை நடத்த வேண்டும் என்பது குறித்தும் கூட பேசினார்.

    கம்ப்யூட்டர்கள்

    கம்ப்யூட்டர்கள்

    மும்பை ஆர்தர் ரோடு சிறை அதாவது மும்பை மத்திய சிறைச்சாலைக்கு கம்ப்யூட்டர்களை வழங்கினார் ராக்கி சாவந்த்.

    English summary
    Actress turned politician Rakhi Sawant has distributed 100 sewing machines at a function organised by an NGO named Awaz foundation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X