அவர் வயிற்றில் என் குழந்தை: தொழில் அதிபரை மணந்த நடிகை பற்றி தீபக் பரபரப்பு
மும்பை: நடிகை ராக்கி சாவந்த் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நான் தான் தந்தை என்று தீபக் கலால் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிறந்த தீபக் கலால் யூடியூபில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமானார். பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தீபக் கலாலை திருமணம் செய்யப் போவதாக கடந்த 2018ம் ஆண்டு அறிவித்ததுடன் பத்திரிகையையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். ஆனால் அந்த திருமணம் நடக்கவில்லை.
இந்நிலையில் ராக்கி இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய தொழில் அதிபரான ரித்தேஷை திருமணம் செய்து கொண்டதாக கடந்த மாதம் அறிவித்தார்.

ராக்கி சாவந்த்
ராக்கி தான் மட்டும் இருக்கும் புகைப்படங்களை தான் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். கணவருக்கு பப்ளிசிட்டி பிடிக்காது என்பதால் அவரின் புகைப்படங்களை வெளியிடவில்லை என்றார். ஆனால் ராக்கிக்கு யாருடனும் திருமணம் நடக்கவில்லை என்றும், அவர் வழக்கம் போன்று விளம்பரம் தேட பொய் சொல்லியுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கர்ப்பம்
தீபக் கலால் வீடியோ ஒன்றை வெளியிட்டு ராக்கி சாவந்தை விளாசியுள்ளார். மேலும் ராக்கி தற்போது 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், அந்த குழந்தைக்கு நான் தான் தந்தை என்றும் தீபக் தெரிவித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் ராக்கி இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது சரியில்லை என்று தீபக் விளாசியுள்ளார்.

கணவர்
தீபக் கலாலுடன் திருமணம் நிச்சயமாகி நின்றுவிட்டதே என்று ராக்கி சாவந்திடம் அண்மையில் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, தீபக் எனக்கு சகோதரர் போன்றவர் என்று கூறி அனைவரையும் வியக்க வைத்தார். ரித்தேஷுக்கும், தனக்கு ஜே.டபுள்.யூ. மாரியட் ஹோட்டலில் திருமணம் நடந்ததாக ராக்கி கூறினார். முதலில் இந்து முறைப்படியும், அடுத்தது கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

படங்கள்
திருமணம் முடிந்த பிறகு ரித்தேஷ் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார். விசா காரணமாக நான் மும்பையில் உள்ளேன். விசா கிடைத்தவுடன் நானும் இங்கிலாந்துக்கு சென்றுவிடுவேன். வெளிநாட்டிற்கு சென்றாலும் நான் தொடர்ந்து இந்திய படங்களில் நடிப்பேன் என்றார் ராக்கி. ஆனால் ரித்தேஷுடன் திருமணமே நடக்கவில்லை என்று தற்போது கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











