ப்ரெய்ன் ட்யூமரால் உயிரிழந்த தாய்.. கதறி அழுத பிரபல நடிகை.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

மும்பை : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ராக்கி சாவந்த் அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ராக்கி சாவந்த், தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி உள்ளார்.

சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ராக்கி சாவந்த், அரைகுறை ஆடையில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துவிடுவார்.

நடிகை ராக்கி சாவந்த்

நடிகை ராக்கி சாவந்த்

சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 14, சீசன் 15 நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த் கலந்து கொண்டார். தொடர்ந்து ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டாலும், ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. இவர் கடந்த ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஆறே மாதத்தில் அவரை விட்டு பிரித்தார்.

இஸ்லாமிய முறைப்படி திருமணம்

இஸ்லாமிய முறைப்படி திருமணம்

இதையடுத்து, ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாக அறிவித்த ராக்கி சாவந்த். இனி அவர் தான் எல்லாம், காதலன் ஆதிலுக்காக எது வேண்டுமானாலும் செய்வேன் என்று சோஷியல் மீடியாவில் அப்பட்டமாக அறிவித்து இருந்தார். கடந்த சில நாட்களுக்கு ஆதில் கானுக்கும் தனக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்ற போட்டோக்களையும் திருமண சான்றிதழையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ராக்கி சாவந்த்.

மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில்

மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில்

இதையடுத்து, மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த ராக்கி சாவந்த் டாப் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக வந்தார். இருப்பினும், அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதை தெரிந்து கொண்ட ராக்கி சாவந்த், 9 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

கதறி அழுத நடிகை

கதறி அழுத நடிகை

நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ராக்கி சாவந்த் அம்மா ப்ரெய்ன் ட்யூமரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அம்மா குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என கதறி அழுது இருந்தார். இந்நிலையில், நடிகை ராக்கி சாவந்தின் தாய், ஜெயா பேடா சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். அம்மா மரணத்தால் துவண்டு போய் கதறி அழுத ராக்கி சாவந்திற்கு பல திரைப்பிரபலங்களும் ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X