என் நிர்வாண வீடியோவை விற்றார்.. இரண்டாவது கணவர் மீது போலீசில் புகார் கொடுத்த பாலிவுட் நடிகை!

மும்பை : சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், இரண்டாவது கணவர் தனது நிர்வாண வீடியோவை பணத்திற்காக விற்றுவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.

சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ராக்கி சாவந்த், அரைகுறை ஆடையில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இவர் தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

நடிகை ராக்கி சாவந்த்

நடிகை ராக்கி சாவந்த்

நடிகை ராக்கி சாவந்த் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அண்மையில் நடிகை ராக்கி சாவந்த், கடந்த சில நாட்களுக்கு முன் ஆதில் துர்ரானிக்கும் தனக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்ற போட்டோக்களையும் திருமண சான்றிதழையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

கதறி அழுத நடிகை

கதறி அழுத நடிகை

மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ராக்கி சாவந்த் அம்மா ப்ரெய்ன் ட்யூமரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அம்மா குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என வீடியோவில் கதறி அழுது இருந்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன் ராக்கி சாவந்தின் தாய், ஜெயா பேடா உயிரிழந்தார். அவருக்கு பல திரைப்பிரபலங்களும் ஆறுதல் கூறினார்கள்.

ஆதில் துர்ரானி கைது

ஆதில் துர்ரானி கைது

இதையடுத்து, தனது இரண்டாவது கணவர் ஆதில் துர்ரானி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது வங்கியில் இருந்த பணத்தை தனக்கு தெரியாமல் எடுத்துவிட்டதால், அம்மாவிற்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, போலீசார் ஆதில் துர்ரானியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

நிர்வாண வீடியோவை விற்றுள்ளார்

நிர்வாண வீடியோவை விற்றுள்ளார்

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராக்கி சாவந்த், நான் ஆதில் துர்ரானியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன், திருமணம் ஆன தகவலை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று என்னிடம் ஆதில் கூறியிருந்தார். அவருக்கும், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது அவரையும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், எனது நிர்வாண வீடியோக்களை எடுத்து சிலருக்கு பணத்திற்காக விற்றுள்ளார்.

திட்டம்போட்டு ஏமாற்றிவிட்டார்

திட்டம்போட்டு ஏமாற்றிவிட்டார்

தனது மருத்துவ பரிசோதனைகள் முடிந்துவிட்டது. அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்துவிட்டேன் ஆதிலுக்கு ஜாமீன் கிடைக்கக்கூடாது. மேலும் ஆதில் பாலிவுட்டில் நுழைய ஆசைப்பட்டார், ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்காகத்தான் என்னை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டார். நன்றாக திட்டம் போட்டு என்னை ஏமாற்றி விட்டார் என்று நடிகை ராக்கி சாவந்த் கண்ணீர் மல்ககூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X