மல்யுத்த வீராங்கனையிடம் சவால்விட்டு அடி வாங்கி மயங்கிய நடிகை
Recommended Video

பஞ்ச்குலா: பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மல்யுத்த வீராங்கனையுடன் மோதி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்துவதற்கு பெயர் போனவர். இந்நிலையில் அவர் முதல் முறையாக வாய்விட்டு அடி வாங்கியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பஞ்ச்குலாவில் மல்யுத்த போட்டி நடைபெற்றது.

ராக்கி சாவந்த்
டபுள்யூ டபுள்யூ இ வீரர் தி கிரேட் காளியின் மல்யுத்த அகாடமியான சிடபுள்யூஇ மல்யுத்த போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த போட்டியின் துவக்க நாளில் மேடையில் நடனம் ஆட ராக்கி சாவந்த் அழைக்கப்பட்டார். அவரும் வந்து டான்ஸ் ஆடிவிட்டு பெண்கள் மோதிக் கொண்ட மல்யுத்த போட்டியை கண்டு ரசித்தார்.
சவால்
ரொபல் என்ற வீராங்கனை தன்னை எதிர்த்து மோதியவர்களை தாக்கி வெற்றி பெற்றார். அதை பார்த்த ராக்கி ரொபலை தன்னுடன் மோதுமாறு சவால் விட்டார். மேடைக்கு சென்ற வேகத்தில் அவரை ரொபல் தூக்கிப் போட்டி நாக் அவுட் செய்துவிட்டார்.
மருத்துவமனை
ரொபல் தாக்கியதில் ராக்கி சாவந்த் மயக்கம் அடைந்துவிட்டார். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தலை மற்றும் இடுப்பு வலிப்பதாக ராக்கி தெரிவித்துள்ளார். ராக்கி நாக் அவுட் ஆன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஏற்பாடு
ராக்கி அவராக சவால் விட்டு அடிவாங்கிவிட்டு தற்போது இது நடிகை தனுஸ்ரீ தத்தாவின் சதி வேலை என்று குற்றம் சாட்டியுள்ளார். மீ டூ விவகாரம் தொடர்பாக தனுஸ்ரீ, ராக்கி சாவந்த் இடையே பிரச்சனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











