ரசிகர்களுக்கு ஆஃபர் கொடுக்கும் ராக்கி படக்குழு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சென்னை: நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் 'ராக்கி'.
இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். டர்புக்கா சிவா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் குறித்து ஒரு வழியாக தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளிவராமல் உள்ளது
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நெற்றிக்கண், ராக்கி, கூழாங்கல் ஆகிய படங்கள் ரிலீசுக்கு காத்துள்ளன. இதில் ராக்கி திரைப்படம் சென்ற ஆண்டே வெளியாகி இருக்க வேண்டும். சில சிக்கல்களால் இன்னும் வெளிவராமல் உள்ளது.

அசத்திய ட்ரைலர்
கடந்த வருடம் ராக்கி படத்தின் முதல் ட்ரைலரும், சமீபத்தில் வெளியான இரண்டாவது ட்ரைலரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இரண்டிலும் கொலை நடுங்க வைக்கும் காட்சிகள் இடம்பெற செய்து ரசிகர்களை திகைக்க செய்துள்ளது ராக்கி படக்குழு.

பரவிய தகவல்
கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டை மீறி பரவி வரும் நிலையில் பல திரைப்படங்கள் வெளிவராமல் பின் வாங்க தொடங்கியுள்ளன. தற்போது உள்ள சூழ்நிலையை கருதி திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளதால் திரைப்படங்கள் OTT ரிலீசுக்கு கைமாறி வருகிறது. ராக்கி திரைப்படமும் Sony Liv OTT தளத்தில் ரிலிஸ் என தகவல்கள் பரவின.

உறுதிப்படுத்தும் வகையில்
அதை உறுதிப்படுத்தும் வகையில் ராக்கி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரெளடி பிக்சர்ஸ் ட்வீட் பதிவிட்டுள்ளது. விரைவில் நாங்கள் உங்களுக்கு வழங்க வேண்டிய ஆஃபர் உடன் விரைவில் வருகிறோம் என ராக்கி படத்தின் போஸ்டருடன் ட்வீட் பதிவிட்டு OTT ரிலீஸை உறுதிபடுத்தியுள்ளது தயாரிப்பு நிறுவனம். ரிலீஸ் தேதி குறித்து கூடிய விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











