OTT ரிலீசுக்கு தயாராகிறதா ராக்கி திரைப்படம்!? ரசிகர்கள் ஆர்வம்
சென்னை: நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் 'ராக்கி'.
இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். டர்புக்கா சிவா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரைலர் மிக பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள நிலையில் ரசிகர்கள் ரிலீசுக்கு காத்துள்ளனர்.

உதவி இயக்குநர்
2011ம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை வென்ற ஆரண்ய காண்டம் படத்தில் உதவி இயக்குனராகவும், சுதா கொங்காராவின் இறுதி சுற்று படத்தில் டயலாக் போர்ஷனை எழுதிய இயக்குனராகவும் பணிபுரிந்தவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
அருண் மாதேஸ்வரன் முதலாவதாக ராக்கி திரைப்படத்தை இயக்கி முடித்தார். அதன் பின்னர் இயக்குனர் செல்வராகவன், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து சாணிக் காயிதம் படத்தை இயக்கி வருகிறார். அருண் மாதேஸ்வரனின் இரண்டு படங்கள் மீதும் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

கொலை நடுங்க வைக்கும்
ராக்கி படத்தின் முதல் ட்ரைலர் கடந்த வருடமும், சமீபத்தில் வெளியான இரண்டாவது ட்ரைலரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இரண்டிலும் ரசிகர்களை கொலை நடுங்க வைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ரத்தம் தெறிக்கும் காட்சிகள் படத்தில் நிறைந்துள்ளன போல் தெரிகிறது.

OTT வெளியீடு
படத்திற்கான பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் படம் வெளிவராமல் இருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதை கருத்திற்கொண்டு ராக்கி படக்குழு படத்தை OTT யில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரவுள்ளது.


Click it and Unblock the Notifications











