தமிழ் சினிமாவில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்: அண்ணன் தங்கை உறவை ஆழமாக பேசிய சிறந்த படங்களின் பட்டியல்

சென்னை: அண்ணன் - தங்கை உறவைப் போற்றும் ரக்‌ஷா பந்தன் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் அண்ணன் - தங்கை உறவை பின்னணியாகக் கொண்டு அதிகமான படங்கள் வெளியாகியுள்ளன.

அதில், ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

சகோதரத்தைப் போற்றும் ரக்‌ஷா பந்தன்

சகோதரத்தைப் போற்றும் ரக்‌ஷா பந்தன்

இந்திய கலாச்சாரத்தில் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுண்டு. அதில் சகோதரத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அண்ணன் - தங்கை உறவு, பலருக்கும் விருப்பமான ஒன்று. வட இந்தியாவில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் ரக்‌ஷா பந்தன் விழாவில், பென்கள் தங்கள் அண்ணன், தம்பிகளுக்கு ராக்கி கட்டி, சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவார்கள். பதிலுக்கு ஆண்கள் தங்களுக்கு ராக்கி கட்டிய சகோதரிகளுக்கு, பரிசுப் பொருட்கள் வழங்குவது வழக்கம்.

தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை

தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை

பொதுவாக திரைப்படங்களில் அதிகமாக காதல் கதைகள் மட்டும் எடுக்கப்படும். விதிவிலக்காக நண்பர்கள், குடும்ப உறவுகளைப் பின்னணியாகக் கொண்டும் படங்கள் வெளியாகி வெற்றிப் பெற்றுள்ளன. அதில் அதிகமாக அண்ணன் - தங்கை உறவை மையமாகக் கொண்டு பல படங்கள் வெளியாகியுள்ளன. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அண்ணன் - தங்கை படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

எம்ஜிஆரின் என் தங்கை

எம்ஜிஆரின் என் தங்கை

மக்கள் திலகம் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எம்ஜிஆருக்கு இயல்பாகவே சகோதரத்துவ பாசம் அதிகம் உண்டு. அப்படி அவர் நடிப்பில் 1952ம் ஆண்டு வெளியான ‘என் தங்கை' திரைப்படம், சிறப்பான வரவேற்பை பெற்றது. இதில், எம்ஜிஆரின் கண்பார்வை இழந்த தங்கையாக சரோஜா நடித்திருந்தார். அதேபோல், எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட் அடித்த ‘நினைத்ததை முடிப்பவன்' படமும், அண்ணன் தங்கை செண்டிமெண்ட்டில் இடம்பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற ‘பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த' என்ற பாடல், இன்றைக்கும் கேட்க இனிமையாக இருக்கும்.

சிவாஜியின் பாசமலர்

சிவாஜியின் பாசமலர்

என்றைக்குமான அண்ணன் தங்கை படமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும் என்றால், அதில் சிவாஜியின் ‘பாசமலர்' கண்டிப்பாக இடம்பெறும். பீம்சிங் இயக்கத்தில் சிவாஜியும் சாவித்ரியும் அண்ணன் தங்கையாக நடித்து பாசப் போராட்டமே நடத்தியிருப்பார்கள். படத்தை முழுவதுமாக பார்க்கும் எவரும் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது. அதேபோல், இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மலர்ந்தும் மலராத' உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும், பொக்கிஷத்துக்கு இணையானவை.

ரஜினியின் முள்ளும் மலரும்

ரஜினியின் முள்ளும் மலரும்

ஸ்டைலைத் தவிர வேறு எதையும் தெரியாத கமர்சியல் ஹீரோ என கட்டம் கட்டப்பட்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, அவரின் முழுத் திறமையையும் வெளிப்படுத்திய படம் ‘முள்ளும் மலரும்.' மகேந்திரன் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் கிளாசிக் திரைப்படங்கள் வரிசையில், முள்ளும் மலரும் படத்துக்கு நிரந்தரமான இடமுண்டு. அண்ணன் - தங்கை பாசத்தை முற்றிலும் புதிய கோணத்தில் காட்டிய இப்படம், ரஜினியின் ஆல்டைம் ஃபேவரைட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவகுமாரின் பாசப் பறவைகள்

சிவகுமாரின் பாசப் பறவைகள்

சிவகுமார், மோகன், லட்சுமி, ராதிகா ஆகியோர் நடிப்பில் கொச்சின் ஹனிபா இயக்கியிருந்த ‘பாசப் பறவைகள்' படத்திற்கும், நல்ல வரவேற்பு கிடைத்தது. கலைஞர் கருணாநிதி கதை எழுதியிருந்த இப்படத்தில், சிவகுமாரும் ராதிகாவும் அண்ணன் தங்கையாக நடித்திருந்தனர். குறிப்பாக இந்தப் படத்தில் வரும் ‘தென்பாண்டித் தமிழே' என்ற பாடல், செம்ம ஹிட் அடித்தது.

பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே

பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே

1993ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்குச் சீமையிலே' திரைப்படம், இன்னொரு பாசமலர் என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். விஜயகுமார், ராதிகா இருவரும் அண்ணன் தங்கையாக வாழ்ந்து காட்டினர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில். வைரமுத்துவின் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. கிராமத்துப் பின்னணியில் அண்ணன் - தங்கை பாசத்தை திரையில் காட்டியது இத்திரைப்படம்.

ஜெயம் ரவியின் உனக்கும் எனக்கும்

ஜெயம் ரவியின் உனக்கும் எனக்கும்

பிரபு, திரிஷா அண்ணன் தங்கையாகவும், ஜெயம் ரவி ஹீரோவாகவும் நடித்த ‘உனக்கும் எனக்கும்' படமும், சிறப்பான வரவேற்பை பெற்றது. த்ரிஷாவை திருமணம் செய்துகொள்வதற்காக, அவரது அண்ணன் பிரபுவின் சம்மதம் பெற ஜெயம் ரவி போராடுவது தான் கதை. இந்தப் படமும் அண்ணன் - தங்கை பாசத்தை பின்னனியாகக் கொண்டு வெளியாகி வெற்றிப் பெற்றது.

Recommended Video

தமிழ் சினிமாவில் குறைந்துவரும் Family Subject Movies | Filmibeat Tamil
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை

பாண்டிராஜ் இயக்கத்தில் 2019ல் வெளியான ‘நம்ம வீடடு பிள்ளை' படத்தில், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் அண்ணன், தங்கையாக நடித்திருந்தனர். உடன்பிறக்காத தங்கைக்காக சிவகார்த்திகேயன் செய்யும் தியாகங்கள் தான் கதை. ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற ‘நம்ம வீட்டு பிள்ளை' சூப்பர் ஹிட் அடித்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X