ஹீரோயினை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டேன்.. ரக்ஷன் ஃபீலிங்!

சென்னை: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக ஆகியிருக்கிறது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம். இந்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கியிருக்கிறார்.இந்த படத்தில் துல்கருடன் ரீட்டு வர்மா ,ரக்ஷ்ன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர்.

Recommended Video

Dulquer Salman Emotional speech | Kannum kannum kollaiyadithaal | success meet | GVM

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது .படக்குழு இந்த வெற்றியை தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் .படத்தில் நடிகராக அறிமுகமாகியிருந்த விஜே.ரக்ஷ்ன் ரசிகர்கள் பலரின் பாராட்டை பெற்றிருந்தார் .

Rakshan Feels bad about his torture to heroine

இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு வெற்றி விழாவின் போது நன்றி தெரிவித்து கொண்டார் ரக்ஷ்ன் .படத்தின் கதையை தாண்டி படத்தின் கதாபாத்திரத்தை தாண்டி துல்கருடன் நடிக்க போவது தான் மிக பெரிய விசயமாக ஆரம்பத்தில் தெரிந்தது என்று ரக்ஷ்ன் கலகலப்பாக கூறினார் .

Rakshan Feels bad about his torture to heroine

மேலும் ஒரு பெரிய நடிகர்களின் படத்தில் ஒரு சிறிய நடிகர் நடிக்கும் போது பெரிய அளவு மரியாதை சிறிய நடிகருக்கு கிடைக்காது .அங்கு அந்த பெரிய நடிகர் எது சொன்னாலும் நடக்கும் ஆனால் இங்கு துல்கர் எந்த ஒரு தலைக்கனமும் இன்றி என்னுடன் நடித்தார் .நிறைய காட்சிகளின் படப்பிடிப்பின் போது நான் ஏன் இல்லை என்றும் கேட்டிருக்கிறார் என்று கூறி ரக்ஷ்ன் துல்கருக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.

Rakshan Feels bad about his torture to heroine

மேலும் இந்த படத்தின் படபிடிப்பின் போது ரக்ஷ்ன் உதவி இயக்குனர்களுடன் தான் அதிகபடியான நேரத்தை செலவிட்டாராம்.அந்த அளவுக்கு உதவி இயக்குனர்கள் நண்பர்களாகி விட்டார்கள். நிறைய இடங்களில் நான் எதிர்பாராத உதவியையும் செய்தார்கள் என்று உதவி இயக்குனரை புகழ்ந்தார் ரக்ஷ்ன்.

Rakshan Feels bad about his torture to heroine

இந்த படத்தில் நடிக்கும் போது ரீட்டு வர்மாவிற்கு தமிழ் தெரியாதாம் அவருடன் நண்பராக பேச தெரியாமல் பேசி நாயகியை படபிடிப்பு தளத்தில் பலமுறை டார்ச்சர் செய்தாராம் ரக்ஷ்ன் .இதற்காக வெற்றி விழாவின் போது மன்னிப்பும் நன்றியும் தெரிவித்து கொண்டார் ரக்ஷ்ன் . இது விஜே ரக்ஷ்னுக்கு முதல் படமாகும் விஜய் தொலைகாட்சியின் பல தொகுப்பாளர்கள் நடிகர்களாக திரையுலகில் அசத்தியிருக்கிறார்கள்.இவரின் முதல் படமே நல்ல பெயரை இவருக்கு பெற்று தந்துள்ளதால் மேலும் இவருக்கு படவாய்ப்புகள் குவிய அதிகம் வாய்ப்புள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X