தனிமையில் இருந்த வீடியோவை காட்டி சித்ராவை மிரட்டினேனா? முதல் முறையாக மனம் திறந்த நடிகர் ரக்ஷன்!

சென்னை: சித்ராவுடன் தனிமையில் இருந்த வீடியோவை காட்டி மிரட்டியதாக வெளியான தகவல் குறித்து நடிகர் ரக்ஷன் மனம் திறந்துள்ளார்.

Recommended Video

சென்னை: சித்ரா எனக்கு ஒரு நல்ல தோழி.. தொகுப்பாளர் ரக்‌ஷன் ஓபன் டாக்..!

சின்னத்திரை நடிகையும் பிரபல விஜேவுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலரான ஹேமந்தை பதிவு திருமணம் செய்திருந்த சித்ரா, வரும் பிப்ரவரி மாதம் அவரை விமரிசையாக திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்.

தூக்கிட்டு தற்கொலை..

தூக்கிட்டு தற்கொலை..

இந்நிலையில் தனது கணவருடன் அறையில் தங்கியிருந்த போதே சித்ரா தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் ஃபேன் இல்லாத நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது எப்படி என கேள்விகள் எழுந்தன.

சித்ராவுடன் சண்டை..

சித்ராவுடன் சண்டை..

மேலும் ஹேமந்திடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சித்ரா நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது பிடிக்கவில்லை என்றும் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகவும் கூறினார். இதனால் சித்ராவுடன் சண்டை போட்டதாகவும் கூறியுள்ளார்.

சிறையில் அடைப்பு..

சிறையில் அடைப்பு..

சண்டையின் போது செத்துத்தொலை என கூறிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றபோது சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறினார். இதனை தொடர்ந்து ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ரெகவரி சாப்ட்வேர்..

ரெகவரி சாப்ட்வேர்..

ஹேமந்த் சந்தேகப்பட்டு தன்னை டார்ச்சர் செய்வதாக சித்ரா தனது மாமனாரிடம் போனில் கதறியதும் தெரியவந்தது. சித்ரா பேசிய ஆடியோ ஆதாரங்களை ஹேமந்த் அழித்த போதும் சைபர் க்ரைம் காவல்துறையினர் ரெகவரி சாப்ட்வேர் மூலம் அவர் பேசிய குரல் பதிவுகளை மீட்டெடுத்துள்ளனர்.

ரிக்ஷனுடன் காதல்

ரிக்ஷனுடன் காதல்

இதனால் சித்ரா மரணம் தொடர்பாக நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சித்ராவின் தோழியான கங்கா பாணி என்பவர், சித்ரா குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் சித்ராவும் ரக்ஷனும் காதலித்தார்கள் என்று கூறினார்.

மிரட்டிய ரக்ஷன்?

மிரட்டிய ரக்ஷன்?

மேலும் இருவரும் ரெசார்ட்டில் தனிமையில் இருந்ததை ரக்ஷன் ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், சித்ரா திருமணம் செய்த பிறகும் அவரது டார்ச்சர் தொடர்ந்ததாகவும் கூறினார். இதனால் அந்த வீடியோவை ரக்ஷன் , ஹேமந்திடம் காட்டிவிடுவாரோ என்ற பயம் சித்ராவுக்கு இருந்ததாகவும் கூறினார்.

ரக்ஷன் வாயைதிறந்தால் மட்டுமே..

ரக்ஷன் வாயைதிறந்தால் மட்டுமே..

இந்த செய்தி பெரும்பாலான ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சித்ராவின் மரணம் பெரும் பரபரப்புக்குள்ளானது. இந்த விவகாரம் தொடர்பாக ரக்ஷன் வாயை திறந்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என்றும் கருத்துக்கள் எழுந்தன.

மிரட்டிய செய்தி பொய்..

மிரட்டிய செய்தி பொய்..

இந்நிலையில் ரக்ஷன் இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கூறியுள்ள ரக்ஷன், நானும் சித்ராவும் டேட்டிங் சென்றதாகவும் அவரை நான் வீடியோ எடுத்து மிரட்டியதாக வந்த செய்தி பொய்யானது. நானே கம்மி சம்பளம் வாங்கும் ஒரு கூலி தொழிலாளியாக வாழ்க்கை நடத்தி வருகிறேன்.

சாவுக்கு எப்படி வருவேன்?

சாவுக்கு எப்படி வருவேன்?

எனக்கு சித்ரா ஒரு நல்ல தோழி. இப்படி செய்தவன் யாராவது சாவுக்கு வருவானா? நான் சித்ராவின் மரணத்திற்கு கூட சென்று இருந்தேன். அங்கே கூட எல்லோரும் ஹேமந்த்தை குறை சொல்லி பேசிக்கொண்டு இருந்தோம் என்று கூறியுள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

நடிகர் ரக்ஷன் விஜய் டிவியில் பிரபல விஜேவாக உள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார் ரக்ஷன். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர்களிடம் விசாரணை

நடிகர்களிடம் விசாரணை

இதனிடையே சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் சித்ரா நடித்துவந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் நடிகைகளிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. மேலும் சித்ரா இறுதியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி குழுவிடமும் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X