10 ஆண்டுகளாக திருமணத்தை மறைத்தது ஏன்...ரக்ஷன் சொன்ன ஹார்ட் டச்சிங் காரணம்

சென்னை : புகழ்பெற்ற விஜே.,வான ரக்ஷன், ராஜ் மற்றும் கலைஞர் டிவி.,களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை துவக்கினார். பின்னர் விஜய் டிவி.,யில் கலக்க போவது யாரு காமெடி ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர்.

தனது சக தொகுப்பாளரான ஜாக்குலினுடன் இணைந்து அவர் தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் ரக்ஷன் - ஜாக்குலின் இடையே காதல் இருப்பதாக பல ஆண்டுகளாக கிசுகிசுக்கள் பரவி வந்தது.

சித்ராவுடன் கிசுகிசு

சித்ராவுடன் கிசுகிசு

கடந்த ஆண்டு உயிரிழந்த டிவி நடிகை சித்ராவுடன், ரக்ஷனுக்கு ரகசிய உறவு இருந்ததாக சமீபத்தில் பல சர்ச்சைகள் எழுந்தது. இந்த இரு வதந்திகளையும் ரக்ஷன் மறுத்தார். ஆனால் இதுவரை அவரது நெருங்கிய நண்பர்களிடம் கூட தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவர் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தார்.

ரகசியத்தை உடைத்த ரக்ஷன்

ரகசியத்தை உடைத்த ரக்ஷன்

இந்நிலையில் காதலர் தினத்தன்று, முதல் முறையாக தனது மனைவியின் போட்டோவை வெளியிட்ட ரக்ஷன், தனக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆகி விட்டதாகவும், ஒரு குஒந்தை இருப்பதாக அறிவித்தார்.

 கேள்வி எழுப்பிய ரசிகர்கள்

கேள்வி எழுப்பிய ரசிகர்கள்

இது அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எதற்காக இத்தனை காலம் திருமணத்தை மறைக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.

ரக்ஷனின் நச் பதில்

ரக்ஷனின் நச் பதில்

இதற்கு பதிலளிக்கும் விதமாக, தனது மனைவி சரண்யாவுடன் இருக்கும் போட்டோவுடன் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில், தினமும் ஸ்டேடஸில் எப்படிக் காதலிக்கிறோம் என்று சொல்வதை விட. எப்படி காலித்தோம் என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்ததே உண்மையான காதலின் வெற்றி என அனைவரையும் வாயடைத்து போக செய்யும் அளவிற்கு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X