உந்தன் கனவுகள் நனவாகட்டும்.. அந்த பிரபல ஹீரோயினுக்கு முன்னாள் காதலர் சொன்ன வாழ்த்து!

By

சென்னை: பிரபல ஹீரோயினுக்கு முன்னாள் காதலர் சொன்ன வாழ்த்து சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர், ராஷ்மிகா மந்தனா.

இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

இப்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் சித்தூர் பகுதி பெண்ணாக நடிக்கிறார். இதையடுத்து சர்வானந்த் ஜோடியாக நடிக்க இருக்கிறார். மேலும் சில தெலுங்கு படங்களில் நடிக்க இருக்கிறார்.

அப்பா - மகள் கதை

அப்பா - மகள் கதை

இந்நிலையில் அவர் மிஷன் மஞ்சு என்ற இந்திப் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார். ஷாந்தனு பாஹி இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இதையடுத்து விகாஷ் பால் இயக்கும் படத்தில் அமிதாப் பச்சனுடன் நடிக்கிறார். இது அப்பா - மகள் பற்றிய கதை.

கிரிக் பார்ட்டி

கிரிக் பார்ட்டி

நடிகை ராஷ்மிகா, கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டியுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து 2017ஆம் ஆண்டு இவர்கள் நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்தது.

பெல்லாகெட்டு

பெல்லாகெட்டு

அந்த நேரத்தில் அவருக்குத் தெலுங்கு சினிமாவில் அதிக வாய்ப்பு கிடைத்ததால், திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. நிச்சயதார்த்ததை ரத்து செய்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் கிரிக் பார்ட்டி படத்தில் இடம்பெற்ற பெல்லாகெட்டு என்ற பாடல், யூடியூப்பில் 100 மில்லியன் கடந்தது.

நினைவில் இருக்கும்

நினைவில் இருக்கும்

இதைக் குறிப்பிட்டு தனது ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார், ராஷ்மிகா. 'நூறு மில்லியனை தொட்ட எனது முதல் பாடல். என்றென்றும் என் நினைவில் இருக்கும்' என்று கூறியிருந்த அவர், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அதை டேக் செய்திருந்தார். அதில் தனது முன்னாள் காதலரான ரக்‌ஷித் ஷெட்டியையும் டேக் செய்திருந்தார்.

Recommended Video

Google declares Rashmika Mandanna as the National Crush of India 2020 | Filmibeat Tamil
கனவு நனவாகட்டும்

கனவு நனவாகட்டும்

இதையடுத்து அதற்கு கமென்ட் செய்த ரக்‌ஷித், ‘மேலும் வளர்க, உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும் என்று கூறியிருந்தார். ஒரு காலத்தில் இருவரும் மாறி மாறி புகார் சொல்லிக் கொண்டிருந்த நிலை மாறி, முன்னாள் காதலி பற்றி ரக்‌ஷித் அப்படி கூறியிருந்ததை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X