ரெட்டி ஆதரவாளர் கட்சியில் சேர்ந்த நடிகை ரக்ஷிதா!
ஏற்கனவே கன்னட நடிகை ரம்யா காங்கிரஸிலும், பூஜா காந்தி மற்றும் மாளவிகா அவினாஷ் ஆகியோர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதாதளத்திலும் சேர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து கன்னட நடிகையான ரக்ஷிதா எம்.எல்.ஏ. ஸ்ரீராமுலுவின் புதிய கட்சியில் கடந்த வெள்ளிக்கிழமை சேர்ந்தார். அப்போது அவரது கணவர் நடிகர்-இயக்குனர் பிரேம் மற்றும் அவரது தாயார் ஆகியோர் உடனிருந்தனர்.
சுரங்க ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்தன ரெட்டிக்கு நெருக்கமானவர் ஸ்ரீராமுலு. அவர் பாஜகவில் இருந்து விலகி பெல்லாரி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்று பாஜகவை அதிர வைத்தவர்.
இவர் தனது பெயரில் பிஎஸ்ஆர் கட்சி என்ற புதியக் கட்சியைத் தொடங்கவுள்ளார். இந்தக் கட்சியில்தான் தற்போது ரக்ஷிதா சேர்ந்துள்ளார்.
நடிகை ரக்ஷிதா மதுர படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அதற்கு முன்பு தம் என்ற படத்தில் சிம்புவுடன் இணைந்து கவர்ச்சி திறமை காட்டினார். அதன் பிறகு அவர் கன்னட படங்களில் நடித்து வந்தார். பிறகு கன்னட நடிகரும், இயக்குனருமான பிரேமை திருமணம் செய்து கொண்டு அவருக்கு இயக்கத்தில் உதவி வருகிறார்.
தனது 5வது திருமண நாளன்று கட்சியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












