ஃபிட்னஸ் முக்கியம் வாத்தியாரே.. 12 கி.மீ சைக்கிள் மிதித்து ஷூட்டிங்கிற்கு சென்ற பிரபல நடிகை!

By

மும்பை: ஜிம் நேரத்தை மிச்சப்படுத்தி 12 கி.மீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்புக்குச் சென்றிருக்கிறார், பிரபல நடிகை.

தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார், ரகுல் பிரீத் சிங்.

இப்போது, சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

 போதைப் பொருள்

போதைப் பொருள்

தமிழ் தவிர தெலுங்கு, இந்தியிலும் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். அவருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷரத்தா கபூர் ஆகியோருடன் ரகுல் பிரீத் சிங்கும் விசாரிக்கப்பட்டார். ஆனால், தனக்கும் போதை பொருளுக்கும் தொடர்பில்லை என்றார் ரகுல்.

 அர்ஜுன் கபூர்

அர்ஜுன் கபூர்

சமீபத்தில், ஹாலிடேவுக்காக மாலத்தீவு சென்றிருந்தார். அங்கிருந்து தினமும் சில புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வந்தார். அது வைரலானது. நடிகை ரகுல் பிரீத் இந்தியில் அர்ஜுன் கபூர் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

 அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

அடுத்து பிரபல பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கன் நடிக்கும் மே டே என்ற இந்திப் படத்தில் நடிக்கிறார். இதில், அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதை அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரகுல் பிரீத், சமீபத்தில் அதில் இருந்து மீண்டார்.

 ஃபிட்னஸ் பிரியை

ஃபிட்னஸ் பிரியை

இதையடுத்து மே டே ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க, நடிகை ரகுல் பிரீத் சிங் சைக்கிளில் சென்றிருக்கிறார். ஃபிட்னஸ் பிரியை ஆன, நடிகை ரகுல் ஜிம்முக்கு செல்லும் நேரத்தை மிச்சப்படுத்தி, சுமார் 12 கிலோ மீட்டர், சைக்கிளில் சென்றிருக்கிறார்.

சைக்கிள் ரேஸா?

அதை, காரில் செல்லும் ஒருவர் வீடியாவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டா கிராமில் வெளியிட்டுள்ளார், ரகுல் பிரீத் சிங். நடிகை சமந்தா உட்பட பலர் இதற்கு கருத்துகளை தெரிவித்துள்ளனர். சிலர் சைக்கிள் ரேஸா, சிறப்பு என்றும் அவரை புகழ்ந்து தள்ளியும் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X