'நம்ம தலைவி வேற லெவல்டா..' பிகினியில் பிரபல ஹீரோயின்.. அப்படி வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை, மாலத்தீவில் இருந்து வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் வைரலாகி வருகிறது.

கடற்கரைகளில் நின்று பிகினியில் புகைப்படம் எடுத்துக் கொள்ளாவிட்டால், சில ஹீரோயின்களுக்கு தூக்கம் வராது போலிருக்கிறது.

இதற்காகவே பல விதவிதமான பீச்களுக்கு படையெடுக்கிறார்கள் சிலர். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

ஒரு வேலையாக

ஒரு வேலையாக

பலர் அதை ஒரு வேலையாகவே செய்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார் ரகுல் பிரீத் சிங். ஒர்க் அவுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகமாக பதிவிட்டு வந்த அவர், இப்போது கிளாமர் ஸ்டில்களை போஸ்ட் செய்து வருவதை வழக்கமாக்கி இருக்கிறார்.

தெலுங்கு, இந்தி

தெலுங்கு, இந்தி

இவர், தமிழில் தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று உட்பட சில படங்களில் நடித்தவர். சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்பு இல்லை

தொடர்பு இல்லை

சமீபத்தில் இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். அவருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷரத்தா கபூர் ஆகியோருடன் ரகுல் பிரீத் சிங்கும் விசாரிக்கப்பட்டார். ஆனால், தனக்கும் போதை பொருளுக்கும் தொடர்பில்லை என்றார் ரகுல்

மினி பாலிவுட்

மினி பாலிவுட்

தெலுங்கு பட ஷூட்டிங் முடிந்த கையோடு ஹாலிடேவுக்காக இப்போது மாலத்தீவு சென்றிருக்கிறார், ரகுல் பிரீத் சிங். மாலத்தீவை மினி பாலிவுட் ஆக்கிவிட்டார்கள், நம் ஹீரோயின்கள். அங்கு ஏற்கனவே காஜல் அகர்வால், வேதிகா, பிரணிதா, மௌனி ராய், மந்திரா பேடி, டாப்ஸி என பலர் அங்கு சென்று வந்தனர், சமீபத்தில்.

வாசனையை நுகருங்கள்

வாசனையை நுகருங்கள்

அதற்கு கேப்ஷனாக, கடலின் வாசனையை நுகருங்கள், ஆகாயத்தை உணருங்கள், உங்கள் ஆத்மா பறக்கட்டும் என்று கவித்துவமாகக் குறிப்பிட்டுள்ளார். இதை லட்சக்கணக்கான நெட்டிசன்ஸ் லைக் செய்துள்ளனர். ஏராளமானவர்கள் கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.

வர்ணித்து கமென்ட்

வர்ணித்து கமென்ட்

'ரகுல் செம ஸ்டைலாக இருக்கீங்க.. என்றும் தலைவி வேற லெவல்டா என்றும் சிலர் கூறியுள்ளார். தமிழ் படத்துல பார்க்க காத்துட்டு இருக்கோம் என்று சில நெட்டிசன்களும் சிலர் அவர் அழகை வர்ணித்தும் கமென்ட் போட்டுள்ளனர். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X