லாக்டவுனிலும் தொடங்கியது ஷூட்டிங்.. 5 மாத இடைவெளிக்கு பின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல நடிகை!

By

சென்னை: கொரோனா பரவலுக்கு இடையில் நடிகை ரகுல் பிரீத் சிங் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் 5 மாதத்துக்குப் பிறகு தொடங்கியுள்ளது.

Recommended Video

Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்துச் செய்யப்பட்டன. தியேட்டர்களும் மூடப்பட்டன. சினிமாதுறை முற்றிலுமாக முடங்கியது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இந்நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு சில மாநிலங்களில் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள, நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. அந்தப் படப்பிடிப்புகளில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் கொரோனா வேகமாகப் பரவி வருவதாலும் பெரும்பாலான படங்களின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.

கே.ஜி.எஃப் சாப்டர் 2

கே.ஜி.எஃப் சாப்டர் 2

இந்நிலையில் கன்னட நடிகர் சுதீப் தனது பாண்டம் படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் தொடங்கியதாக அறிவித்திருந்தார். கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் ஷுட்டிங்கும் இப்போது தொடங்கியுள்ளது. அக்‌ஷய்குமார் நடிக்கும் பெல்பாட்டம் படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. ஆமிர்கான் தனது லால் சிங் சத்தா படத்தை துருக்கியில் தொடங்கி யுள்ளார்.

ரகுல் பிரீத் சிங்

ரகுல் பிரீத் சிங்

இந்நிலையில், நடிகை ரகுல் பிரீத் சிங் இந்தியில் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கும் இப்போது மும்பையில் தொடக்கியுள்ளது. இவர், தமிழில் யுவன், தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் இப்போது நடித்து வருகிறார்.

காதல் கதை

காதல் கதை

இந்தியில் அர்ஜுன் கபூர் ஜோடியாக இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதை காஷ்வி நாயர் இயக்குகிறார். எல்லைப் பகுதி காதலை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் எப்போதோ முடிவடைந்துவிட்டன. 14 நாள் ஷூட்டிங் மட்டுமே பாக்கி இருந்தது. இதன் ஷூட்டிங் மும்பையில் தொடங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X