கத்துக்கணும் ரகுல் ப்ரீத் ஆண்ட்ரியாவிடம் இருந்து கத்துக்கணும்: சொல்வது ஸ்ரீ ரெட்டி

By Siva

ஹைதராபாத்: ரகுல் ப்ரீத் சிங் ஆண்ட்ரியாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகமாக இருப்பதாக கூறி வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இது குறித்து ரகுல் ப்ரீத் சிங்கிடம் கேட்டதற்கு எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. படுக்கைக்கு அழைத்தால் செல்வதும், செல்லாததும் நம் கையில் உள்ளது. திறமை தான் முக்கியம் என்றார்.

Rakul Preet should learn from Andrea: Says Sri Reddy

ரகுல் ப்ரீத்தின் இந்த பதில் ஸ்ரீ ரெட்டிக்கு பிடிக்காமல் அவரை கேவலமாக திட்டி பேட்டி கொடுத்தார். இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி இப்படி பேச தைரியம் வேண்டும். அவர் சொல்வதில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் ஆண்ட்ரியா.

ஆண்ட்ரியா தனக்கு ஆதரவாக பேசியதை பார்த்து உச்சி குளிர்ந்து போயுள்ளார் ஸ்ரீ ரெட்டி. சக நடிகைகள் பற்றி எப்படி பேச வேண்டும் என்று தமிழ் நடிகை ஆண்ட்ரியாவிடம் இருந்து ரகுல் ப்ரீத் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

ஸ்ரீ ரெட்டி பற்றி கேள்வி கேட்டாலே பல நடிகைகள் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X