இனிமே தப்பிக்க முடியாது.. சம்மன் வந்ததை ஒப்புக் கொண்ட ரகுல் ப்ரீத் சிங்.. நாளை ஆஜராகிறார்!

மும்பை: போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் அதனை ஒப்புக் கொண்டுள்ளார்.

முன்னதாக அதுபோன்று சம்மன் எதுவும் வரவில்லை என மறுத்திருந்த நிலையில், தற்போது ரகுல் ப்ரீத் சிங் ஒப்புக் கொண்டு இருப்பது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு பாலிவுட்டில் நிலவும் போதைப் பொருள் புழக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

நேற்று பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோருக்கு NCB சம்மன் அனுப்பிய செய்திகள் பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பின.

நாளை ஆஜராகிறார்

நாளை ஆஜராகிறார்

ஹைதராபாத்தில் விளம்பர பட ஷூட்டிங்கில் பங்கேற்று விட்டு நேற்று இரவு மும்பை வந்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். போதைப் பொருள் விவகாரத்தில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அதனை தற்போது ஒப்புக் கொண்டுள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் அதன் விசாரணைக்காக நாளை ஆஜராகிறார்.

சிக்கிய 4 நடிகைகள்

சிக்கிய 4 நடிகைகள்

நடிகை தீபிகா படுகோனேவின் மேனேஜர் வாட்ஸப் மூலமாக அவர் இந்த விசாரணை வலைக்குள் சிக்கி உள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத், ரியா சக்கரவர்த்தி உடன் போதைப் பார்ட்டியில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் கலந்து கொண்டனர் என பாலிவுட்டின் 4 முன்னணி நடிகைகள் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளனர்.

போன் எடுக்கல

போன் எடுக்கல

முன்னதாக ரகுல் ப்ரீத் சிங் அதனை மறுத்திருந்தார். இதுகுறித்து NCB அதிகாரியான கே.சி.பி. மல்கோத்ரா கூறுகையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு உண்மையாகவே சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. போன் மூலமாகவும், வேறு பல தளங்கள் மூலமாகவும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். ஆனால், இதுவரை எந்தவொரு ஒத்துழைப்பும் கொடுக்காமல், இருந்து வருகிறார் எனக் கூறி இருந்தார்.

தீபிகா மேனேஜர் ஆஜர்

தீபிகா மேனேஜர் ஆஜர்

போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை தீபிகா படுகோனேவின் மேனேஜர் கரிஷ்மா பிரகாஷ், ஃபேஷன் டிசைனர் சைமன் கம்போட்டா மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேனேஜர் ஸ்ருதி மோடி உள்ளிட்டோர் இன்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜராகி உள்ளனர்.

விரைவில்

விரைவில்

மேலும், வெகு விரைவாக நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், தீபிகா படுகோனே மற்றும் ஷ்ரத்தா கபூர் இந்த விவகாரம் தொடர்பாக NCB அதிகாரிகள் முன்பு ஆஜர் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்கு வராமல் தப்பிக்கும் வழிகளையும் நடிகைகள் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடும் எதிர்ப்ப்பு

கடும் எதிர்ப்ப்பு

இந்த விவகாரம் காட்டுத் தீயைப் போல பரவிய நிலையில், பாலிவுட் ரசிகர்கள் முதல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இந்த நான்கு நடிகைகளின் மீதும் தங்களின் வெறுப்பு உணர்வை கொட்டித் தீர்த்து வருகின்றனர். அவர்களின் படங்கள் இனிமேல் புறக்கணிக்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

வழக்கு தொடர்ந்த ரகுல்

வழக்கு தொடர்ந்த ரகுல்

முன்னதாக தனது பெயரை இந்த போதைப் பொருள் விவகாரத்தில் மீடியாக்கள் ஆதாரம் இல்லாமல் பயன்படுத்தி வருவதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். தற்போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தனக்கு சம்மன் அனுப்பி உள்ளதை அவரது வழக்கறிஞர்கள் மூலமாக உறுதி படுத்தி உள்ளார். நாளை ஆஜராக உள்ளார்.

Recommended Video

போதைப்பொருள் விவகாரத்தில் சிறை சென்ற நடிகைகள்.. பெண் காவலரிடம் சிகரெட் கேட்டு தகராறு
தமிழில் இரண்டு படங்கள்

தமிழில் இரண்டு படங்கள்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரை உலகில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஏலியன் படமான அயலான் உள்ளிட்ட இரு படங்களில் நடித்து வருகிறார். பிரபல நடிகைகள் பெயர்கள் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ள நிலையில், ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X