அப்பா வயது ஹீரோவுக்கு ஜோடியான ரகுல் ப்ரீத் சிங்
Recommended Video

ஹைதராபாத்: மன்மதுடு 2 படத்தில் ரகுல் ப்ரீத் சிங் அப்பா வயது நடிகருக்கு ஜோடியாகியுள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு தெலுங்கு திரையுலகம் தான் நிரந்தரமாக ஆதரவு அளித்து வருகிறது.
அவர் தற்போது ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் நாகர்ஜுனா நடிக்கும் மன்மதுடு 2 படத்தில் நடிக்கிறார்.
59 வயது நாகர்ஜுனாவுக்கு அவர் ஜோடியாக நடிக்கிறார்.

அங்கிள் ஹீரோ
சீனியர் நடிகர்கள் தங்களின் மகளை விட வயது குறைவான நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது ஒன்றும் புதிது இல்லை. ஆனால் பெரும்பாலும் இளம் ஹீரோக்களுடன் நடித்து வந்த ரகுல் நாகர்ஜுனாவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது வியக்க வைத்துள்ளது.

நாக சைதன்யா
நாக சைதன்யா ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் மன்மதுடு 2 படத்தில் சைதன்யாவின் அப்பாவுடன் ஜோடி சேர்ந்ததால் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

மர்ஜாவான்
மிலாப் ஜவேரி இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா அவரின் காதலி என்று கிசுகிசுக்கப்படும் தாரா சுதாரியா நடித்து வரும் மர்ஜாவான் இந்தி படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராசி
ரகுல் ப்ரீத் சிங் பற்றி அடிக்கடி ஏதாவது வதந்தி கிளம்புகிறது. அவரை பிடிக்காத சில திரையுலக பிரபலங்களே அவர் ராசியில்லாதவர் என்று கிளப்பி விடுவதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











