சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி இந்த நடிகையா?

By Vignesh Selvaraj

Recommended Video

மூன்று மொழிகளில் உருவாகும் சிவா கார்த்திகேயனின் படம் !

சென்னை : 'வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து தற்போது பொன்ராம் இயக்கும் 'சீமராசா' படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்திருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் ராஜேந்திரன் இயக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் நடிக்கிறார் சிவா. இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்க இருக்கிறாராம்.

பொன்ராம் படம்

பொன்ராம் படம்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா ஆகியோர் நடித்திருக்கும் படத்திற்கு 'சீமராசா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொன்ராம் இயக்கி வரும் படத்தின் வேலைகளை முடித்ததும் 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சயின்ஸ் ஃபிக்‌ஷன்

சயின்ஸ் ஃபிக்‌ஷன்

'இன்று நேற்று நாளை' படத்தை டைம் டிராவல் கதையாக சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் இயக்கிய ரவிகுமார், தனது அடுத்த படத்தையும் அதே ஜானரிலேயே இயக்க உள்ளார். கடந்த ஒரு வருடமாக இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

24AM ஸ்டூடியோஸ்

24AM ஸ்டூடியோஸ்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்ட பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. 24 AM நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

நாயகி ரகுல் பிரீத் சிங்

நாயகி ரகுல் பிரீத் சிங்

இப்படத்தின் நாயகியாக நடிப்பதற்கு ரகுல் பிரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. படப்பிடிப்பு தேதிகள் முடிவானவுடன், அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று தெரிவித்தார்கள். 2019-ல் இப்படம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X