நான்வெஜ் போரடிச்சிடுச்சு...இனி வெஜ் தான்...சைவத்திற்கு மாறிய ரகுல் ப்ரீத் சிங்

சென்னை : திடீரென யாரும் எதிர்பாராத விதமாக தனது வாழ்க்கை மற்றும் உணவு முறையை மாற்றிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என பலரும் அவரை காரணம் கேட்டு வருகின்றனர். இதற்கு சுவாரஸ்யமான காரணத்தை கூறி உள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

Rakul Preet Singh adopts this new lifestyle

அவர் கூறுகையில், நான் எனது வாழ்க்கை முழுவதும் தீவிர அசைவ பிரியையாக தான் இருந்துள்ளேன். சைவம் அதிகம் பிடிக்காது. எனது தினசரி உணவில் அசைவம் இருக்க வேண்டும். குறிப்பாக முட்டை இருந்தே ஆகணும்.

இந்த சமயத்தில் தான் ஒரு நாள் சைவமாக மாற நான் திடீரென முடிவு செய்தேன். இது திடீரென எடுத்த முடிவு தான். நானாக எடுத்த முடிவு தான். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. தற்போது நான் லைட்டாகவும், எனர்ஜியாகவும் உணர்கிறேன் என்றார்.

வேலை சமயங்களில் எப்படி சைவத்தை கடைபிடிக்க முடிகிறது என கேட்டதற்கு, மும்பையில் சூட்டிங் நடக்கும் போது வெஜ் ஷேக், பழங்கள், சாப்பாடு வீட்டில் இருந்து வந்து விடும். வெளி நாடுகளுக்கு செல்லும் போது தான் பிரச்சனை. பல நாடுகளில் கிரில்ட் சிக்கன், மீன் தான் ஈஸியாக கிடைக்கும்.

அப்போது தான் சமாளிக்க வேண்டும். எதுவுமே இல்லை என்றாலும் எனது டீமில் உள்ளவர்கள் எங்கிருந்தாவது காய்களை வாங்கி எனக்கு சமைத்து கொடுத்து விடுவார்கள். பருப்பு, சாதம், கிச்சடி பெரும்பாலும் செய்வார்கள். சைவத்தில் சுவைக்காக நெய் சேர்த்துக் கொள்வேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X