அந்த மெகா பட்ஜெட் படத்தில்.. பாலிவுட் ஹீரோ ஜோடியாகிறார் ரகுல் பிரீத்.. அடுத்த மாதம் ஷூட்டிங்!
சென்னை: மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்திப் படத்தில் பிரபல ஹீரோ ஜோடியாக நடிக்கிறார், ரகுல் பிரீத் சிங்.
தமிழில் யுவன், தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட சில படங்களில் நடித்தவர், ரகுல் பிரீத் சிங்.
இப்போது ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

அர்ஜுன் கபூர் ஜோடி
தமிழ் தவிர தெலுங்கு, இந்தியிலும் நடித்து வருகிறார். இந்தியில், காஷ்வி நாயர் இயக்கத்தில், அர்ஜுன் கபூர் ஜோடியாக காதல் படம் ஒன்றில் அவர் நடித்து வருகிறார். தெலுங்கில், நிதின் ஜோடியாக செக், கிரிஷ் இயக்கும் பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார்.

போதைப் பொருள்
ரகுல் பிரீத் சிங், சமீபத்தில் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். அவருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷரத்தா கபூர் ஆகியோருடன் ரகுல் பிரீத் சிங்கும் விசாரிக்கப்பட்டார். தான் போதைப் பொருள் பயன்படுத்துவதில்லை என்று அவர்களிடம் ரகுல் கூறியிருந்தார்.

சமீபத்தில் அறிவிப்பு
இந்நிலையில், மற்றொரு இந்தி படத்தில் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்து இயக்கும் இந்திப் படம், மே டே. இதில் அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில், அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார், நடிகை ரகுல் பிரீத் சிங்.

தி தி பியார் தி
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், அடுத்த மாதம் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் தொடங்குகிறது. இதற்கு முன் தி தி பியார் தி என்ற படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக ரகுல், நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த வருடம் வெளியாகி இருந்தது.


Click it and Unblock the Notifications











