Rakul Preet Singh New Car: ஆத்தி.. பல கோடிக்கு சொகுசு கார் வாங்கிய அயலான் ஹீரோயின்.. பண மழைதான்!
சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்று புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியது திரைத்துறையில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஹீரோக்களுக்கு இணையாக பல கோடிகளை அள்ளிக் கொடுத்து பிரம்மாண்ட சொகுசு காரை ரகுல் ப்ரீத் சிங் வாங்கி உள்ளார்.
தமிழில் வரும் தீபாவளிக்கு ரகுல் ப்ரீத் சிங், சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வெளியாகவிருக்கிறது. மேலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்துள்ளார்.

சமீப காலமாக பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் மெர்சிடஸ் கார் ஒன்றை தற்போது புதிதாக வாங்கி இறக்கி இருக்கிறார்.
அயலான் ஹீரோயின்: தமிழில் என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, தேவ், ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கில் சில படங்களிலும் இந்தியில் பல படங்களிலும் நடித்துள்ளார்.
இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்தியேன் நடித்துள்ள ஏலியன் படத்தில் ஹீரோயினாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் அந்த படம் இந்த தீபாவளிக்காவது வருமா என காத்திருக்கிறார்.
3.5 கோடிக்கு சொகுசு கார்: அயலான் படத்தைத் தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இந்தியன் 2 படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தியில் ஓடிடி படைப்புகளில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங் டாப் ஹீரோயினாக இல்லாத போதும் 3.5 கோடிக்கு பிரம்மாண்ட சொகுசு காரை வாங்கியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
Mercedes-Benz Maybach GLS எனும் பிரம்மாண்ட சொகுசு காரைத் தான் 3.5 கோடி கொடுத்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் வாங்கியதாக பாலிவுட் வட்டாரங்கள் வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளன. இன்று காலை ரகுல் ப்ரீத் சிங்கின் வீட்டுக்கு வெளியே அந்த சொகுசு கார் வந்து இறங்கிய நிலையில், மும்பையில் உள்ள புகைப்படக் கலைஞர்கள் அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இத புதிய கார் வாங்கியது குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு போஸ்ட்டும் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











