Rakul Preet Singh Net Worth: பக்கா 90ஸ் கிட்.. அயலான் பட ஹீரோயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: டெல்லியில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ரகுல் ப்ரீத் சிங் இன்று தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கன்னடத்தில் வெளியான கில்லி படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங் தமிழில் யுவன், தடையற தாக்க உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.
என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
33வது பிறந்தநாள்: சிவகார்த்திகேயனின் அயலான், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பே நடித்திருந்தாலும், அடுத்த ஆண்டு அந்த படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி டெல்லியில் பிறந்த ரகுல் ப்ரீத் சிங் மாடலிங்கில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சினிமாவில் நடிகையானார். ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், தென்னிந்திய படங்களில் நடித்து வந்தவர், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.
ரகுல் ப்ரீத் சிங் சொத்து மதிப்பு: ஒரு படத்துக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் மும்பையில் ரகுல் ப்ரீத் சிங் தனியாக சொந்த வீடுகளை வைத்துள்ளார். மேலும், சமீபத்தில் விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை அவர் வாங்கிய வீடியோக்கள் வெளியாகி இருந்தன.

2009ல் நடிக்க ஆரம்பித்த 90ஸ் கிட் ரகுல் ப்ரீத் சிங் தனது 33 வயதில் சுமார் 50 கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமாவை தாண்டி ஏகப்பட்ட விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பர்த்டே பேபிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பொங்கலுக்கு அயலான்: அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான் மூலம் மீண்டும் கோலிவுட் ரசிகர்களை கவர காத்திருக்கிறார். இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











