Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
லண்டனில் காதலருடன் லூட்டி அடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்..தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை : நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது பிறந்த நாளை காதலருடன் லண்டனில் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். மகேஷ் பாபு, ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலருக்கும் நாயகியாக நடித்துள்ளார்.
தமிழில் கமல் நடித்து வரும் இந்தியன் 2, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
அமீர்
கான்
சொன்னதுக்கு
முன்பாகவே
ஓடிடியில்
வெளியான
லால்
சிங்
சந்தா…
ஏன்
இந்த
திடீர்
மாற்றம்?

ரகுல் ப்ரீத் சிங்
19 வது வயதில் கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தமிழில் தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு படத்திற்கு ரூபாய் இரண்டு கோடி வரை இவர் சம்பளம் வாங்கும் ரகுல் ப்ரீத் காதலர் ஜங்கிலி பிக்சர்ஸ் தயாரித்து வரும் டாக்டர் ஜி மருத்துவ மாணவியாக நடித்து வருகிறார்.

இவர் தான் என் காதலர்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, பல இடங்களில் இருவரும் ஜோடியாக சுற்றிவந்தனர். அக்டோபர் 10ந் தேதி தனது பிறந்த நாளை அன்புக் காதலருடன் லண்டனில் செம பார்ட்டி கொடுத்து கொண்டாடி உள்ளார். இந்த கொண்டாட்டத்தில் பூமி பெட்னேகர், அர்ஜுன் கபூர் மற்றும் டினோ மோரியோரும் கலந்து கொண்டனர்.

நிஜ வாழ்க்கையில் நடிக்கவில்லை
இந்நிலையில் தனது காதல் குறித்து பேசியுள்ள ராகுல் ப்ரீத் சிங், எனது வாழ்க்கையை இரண்டு வழியில் கொண்டு செல்ல நான் விரும்பவில்லை. சிலர் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக பேசாமல் இருக்கிறார்கள். அது ஒரு மனநிலை. ஆனால் நான் அப்படி இல்லை. என் காதலை மனம் திறந்து வெளிப்படையாக அனைவருக்கும் தெரிவித்துவிட்டேன். கேமரா முன் நடிப்பது போல நிஜவாழ்க்கையிலும் நடிக்க நான் விரும்ப வில்லை. நிஜ வாழ்க்கையில் நான் உண்மையாக இருக்க ஆசைப்படுகிறேன்.

பயத்துடன் இருக்க விரும்பவில்லை
எல்லாருடைய வாழ்க்கையிலும் துணை என்பது முக்கியமான ஒன்று. நானும், ஜாக்கியும் எங்கள் உறவில் இயல்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கிறோம். இது பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதிலும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். வாழ்க்கை மிகவும் எளிமையானது. அதை பயத்தின் காரணமாகவே சிக்கலாக்குகிறோம். நான் அந்த பயத்துடன் இருக்க விரும்பவில்லை என கூறினார்.