ரம்ஜான் வாழ்த்து.. கார்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்து.. ரகுல் ப்ரீத் சிங் !
சென்னை : நடிகை ரகுல் ப்ரீத் சிங் ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். அத்துடன் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
ரகுல் பிரீத் சிங் எப்போதுமே சமூக வலைதளங்களில் பரபரப்பாக பலவிதமான அப்டேட்களை போட்டுக் கொண்டே இருப்பார்.' ரகுலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ரகுல் பிரீத் சிங் பொதுவாகவே செம ஜாலியானவர். கவர்ச்சியாக உடை அணிவது இவருக்கு ஒன்னும் புது விஷயம் கிடையாது.
இந்த நேரத்தில் சில நெட்டிசன்ஸ் அவர் துண்டுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கங்களில் போட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் தீயாகபரவி வருகிறது.

எதிலும் ஹிட்
கன்னட படத்தின் மூலம் சினிமா துறைக்கு வந்த ரகுல் கொஞ்சம் பப்ளியாகவே காணப்பட்டார். ரகுலை ரசிக்க ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பல பல ஹிட்களை கொடுத்து பாலிவுட்டுக்கு சென்று விட்டார். திரும்பவும் வந்து நிறைய படங்கள் தமிழில் செய்வார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

அம்சமான ரகுல்
ஸ்பைடர் படத்தில் ரகுல் நடித்த எல்லா காட்சிகளுமே ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்றது அதுமட்டுமின்றி தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக் உடன் வரும் ரொமான்டிக் காட்சிகள் அனைத்தும் அவ்வளவு அழகு. ரகுல் பிரீத் சிங் தேர்ந்தெடுத்த நிறைய கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிடித்தமான கதாபாத்திரமாக மாறியது மூக்கும் முழியுமாக மிகவும் அழகாக சிரிப்பதும் குறும்புத்தனம் செய்வதும் ரகுல் ஸ்டைல். நிறைய இயக்குனர்கள் ரகுல் பிரீத் வைத்து நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்ய வேண்டுமென்று திட்டமிட்டுள்ளனர்.

வீட்டுவேலை
இந்த ஊரடங்கு சமயத்தில் யோகா செய்வது ,உடற்பயிற்சி செய்வது, சமையல் செய்வது, டிவி பார்ப்பது , இப்படி எந்த வேலையா இருந்தாலும் ரசிகர்களை கவரும் வண்ணம் ட்ரெண்டான கிளாமர் உடைகள் போட்டு அசத்துகிறார் ரகுல். இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்கள்,வீடியோக்கள் அனைத்துமே வைரல் தான் .

கட்டுக்கோப்பான உடல்
எப்போதும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தும் ரகுல் தலைகீழாய் தொங்கியும், வெயிட் லிப்ட் செய்தும் தனது உடலை கட்டு கோப்பாக வைத்து இருக்கிறார் .உடற்பயிற்சி ,யோகா போன்ற விஷயங்களை செய்ய சொல்லி தனது ரசிகர்களுக்கும் அவர் பரிந்துரை செய்து வருகிறார். இதெல்லாம் தனக்கு பிடித்த விஷயம் என்றும் அவர் கூறிவருகிறார் .
Recommended Video

துண்டுடன் ரகுல்
சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். அத்துடன் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார். ஆனால் சில நெட்டிசன்ஸ் அவர் துண்டுடன் இருக்கும் புகைப்படத்தை பல இன்ஸ்டா பக்கங்களில் போட்டு வைரலாக்கி வருகின்றனர். அதனை பார்த்த ரசிகர்கள் "சும்மா இருக்குற ரகுலை யாரு வம்பிழுத்தது" என்று கேட்டு வருகின்றனர். அனைத்து நடிகைகளும் ஊரடங்கு காரணமாக புகைப்படங்களை வெளிட்டு வருகின்றனர். ஆனால் சில நடிகைகள் மட்டுமே அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ரகுல் ப்ரீத் சிங் இடம்பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











