போதைப் பொருள் விவகாரம்.. டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடிய ரகுல் ப்ரீத் சிங்.. டிரெண்டாகும் ஹாஷ்டேக்!

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்டு வந்த நடிகை ரியா சக்கரவர்த்தி போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.

நடிகை ரியா சக்கரவர்த்தி, ரகுல் ப்ரீத் சிங்கும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறினார் என வட இந்திய மீடியாக்கள் சில செய்திகளை வெளியிட்டன.

இதனால், கடுப்பான நடிகை ரகுல் ப்ரீத் சிங் இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாலிவுட்டிலும்

பாலிவுட்டிலும்

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து உள்ளார். 2014ம் ஆண்டு யாரியான் படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஐயாரி, தே தே பியார் தே, சிம்லா மிர்சி உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

கனெக்‌ஷன்

கனெக்‌ஷன்

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் நடிகை ரியா சக்கரவர்த்தி உடன் இவருக்கு தொடர்பு இருந்ததாகவும், போதைப் பொருள் புழக்கத்தில் இவருக்கும் பங்கு உள்ளதாக நடிகை ரியா சக்கரவர்த்தி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் கூறியதாக சில பாலிவுட் மீடியாக்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டன.

ரியா கூறவில்லை

ரியா கூறவில்லை

ஆனால், நார்காடிக்ஸ் கன்ட்ரோல் அதிகாரிகள், நடிகை ரியா சக்கரவர்த்தி, நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரை கூறவில்லை என்பதை தெளிவுப்படுத்தி எக்ஸ்க்ளூசிவ் என பரவிய பொய்யான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதனை அடுத்து நடிகை ரகுல் ப்ரீத் சிங், மீடியாக்களுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பெயர் கெட்டுப்போச்சு

பெயர் கெட்டுப்போச்சு

ஒட்டுமொத்த இந்தியர்கள் மத்தியிலும் தனது பெயரை சில மீடியாக்கள் திட்டமிட்டே கெடுத்து விட்டன என்றும், சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் தன்னை சம்பந்தப்படுத்தி செய்திகள் வெளியிட்டது மிகப்பெரிய தவறு என்றும், அதற்கான உரிய நடவடிக்கையை கோர்ட் எடுக்க வேண்டும் என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் கோரியுள்ளார்.

நீதிமன்றம் அதிரடி

நீதிமன்றம் அதிரடி

இது தொடர்பாக, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், பிரசார் பாரதி மற்றும் பிரெஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா உள்ளிட்டவற்றுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், இது போன்ற சென்சிடிவ்வான நேரங்களில் மீடியா முழு கவனத்துடன் கட்டுப்பாடுடன் செய்திகளை வெளியிடுவது அவசியம் என்றும் குட்டி இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும், தீவிர விசாரணை நடைபெற உள்ளது.

Recommended Video

VIP 2 ல் நடித்த Florent Pereira கொரோனாவால் மரணமடைந்தார் - FilmiBeat Tamil
டிரெண்டாகும் ஹாஷ்டேக்

டிரெண்டாகும் ஹாஷ்டேக்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்ட போதே அவரது ரசிகர்கள், யோகா போன்ற ஆரோக்கியமான விஷயங்களில் ஈடுபட்டு வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இதுபோன்ற தவறுகளை செய்திருக்க மாட்டார் என்று கூறி வந்தனர். இந்நிலையில், மீடியாவுக்கு எதிராக ரகுல் ப்ரீத் சிங் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, #RakulPreetSingh என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X