குப்புறபடுத்து புதுவித யோகா செய்த பிரபல நடிகை.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மும்பை: இந்தியன் 2, அயலான் என மிகப்பிரம்மாண்டமாக தமிழில் உருவாகி வரும் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

அட்டகாசமான நடிப்பு திறமை, அழகான நடனம் என அனைவரையும் கவர்ந்த ரகுல் ப்ரீத் சிங் இப்பொழுது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

சமீபத்தில் பாலிவுட்டையே உலுக்கிய போதைப்பொருள் பயன்படுத்திய திரைப் பிரபலங்களின் லிஸ்டில் ரகுல் ப்ரீத் சிங்கும் இருக்க இப்பொழுது அவர் பதிவிட்டு இருக்கும் யோகா புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

ஃபேவரிட் திரைப்படமாக

ஃபேவரிட் திரைப்படமாக

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான 7ஜி ரெயின்போ காலனி தமிழ் சினிமாவையே உலுக்கிய நிலையில், இந்தத் திரைப்படம் இன்றளவும் பலரது ஃபேவரிட் திரைப்படமாக இருந்து வருகிறது.

கில்லி

கில்லி

7ஜி ரெயின்போ காலனி பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் கன்னட மொழியில் "கில்லி" என்ற பெயரில் ரீமேக் ஆக அதில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

சொக்கவைக்கும் நடிப்பு

சொக்கவைக்கும் நடிப்பு

தனது சொக்கவைக்கும் நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே பல ரசிகர்களை கவர்ந்த ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி என கலக்கி வருகிறார்.

இந்தியன் 2

இந்தியன் 2

தமிழில் அருண் விஜய் நடிப்பில் உருவான தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் தனது அறிமுகத்தை கொடுத்த ரகுல் ப்ரீத் சிங் அதைத்தொடர்ந்து ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, தேவ் என தொடர் வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வர இப்பொழுது தமிழில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதிரடி விசாரணை

அதிரடி விசாரணை

பாலிவுட்டில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நாட்டையை உலுக்கிய சம்பவத்தில் பல முன்னணி நடிகைகளின் பெயர் அடிபட அதில் தீபிகா படுகோனே, ரோஹா சக்கரவர்த்தி, ரகுல் ப்ரீத் சிங் என பலரும் சொகுசு விருந்துகளில் போதைப் பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டனர்.

போதையில் படுத்து இருக்கீங்களா

போதையில் படுத்து இருக்கீங்களா

இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்ற நிலையில் ரகுல் ப்ரீத் சிங் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குப்புற படுத்தவாறு யோகா செய்து வெளியிட்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் கஞ்சா ஓவராயிடுச்சி என ரகுல் ப்ரீத் சிங்கை பங்கமாக கலாய்த்து வருவதோடு" என்ன கஞ்சா அடிச்சிட்டு போதையில் படுத்து இருக்கீங்களா " என இஷ்டத்துக்கு பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X