ஏம்ப்பா, சமந்தாவுக்கும், ராகுல் ப்ரீத் சிங்கிற்கும் இடையே ஒரே சண்டையாம்!
ஹைதராபாத்: தெலுங்கு படத்தில் வாய்ப்பை பெற சமந்தா மற்றும் ராகுல் ப்ரீத் சிங் இடையே ஒரே கவர்ச்சி சண்டையாமப்பா.
தெலுங்கு திரை உலகின் ராணியாக இருந்தவர் இலியானா. பாலிவுட்டில் சாதிக்கப் போகிறேன் என்று அவர் நடையை கட்டிய பிறகு அந்த இடத்திற்கு வந்தவர் சமந்தா. சமந்தா நடித்தால் அந்த படம் ஹிட்டாகிவிடும் என்று டோலிவுட்காரர்கள் நம்பினார்கள்.
சமந்தாவும் ஹைதராபாத்திலேயே தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

தமிழ்
தெலுங்கு திரை உலகின் முடிசூடா ராணியாக இருந்தபோதிலும் சமந்தாவுக்கு தமிழ் திரை உலகிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆசை வந்தது. அதனால் தமிழ் படங்களில் கவனம் செலுத்தினார். தெலுங்கில் சொதப்பத் துவங்கினார். விளைவு, சமந்தா நடித்தும் படம் ஊத்தும் நிலைமை ஏற்பட்டது.

தமன்னா
டோலிவுட்டில் மார்க்கெட் ஆடிப் போயிருந்த தமன்னா பாகுபலி படம் மூலம் தயாரிப்பாளர்கள் விரும்பும் ஹீரோயினாகிவிட்டார். முன்னணி ஹீரோக்களின் பார்வையும் சமந்தா அல்ல தமன்னா பக்கம் திரும்பியுள்ளது.

ஸ்ருதி
ஸ்ருதி ஹாஸனுக்கு தெலுங்கில் மார்க்கெட் வலுவாக உள்ளது. இந்நிலையில் அவர் மகேஷ்பாபுவுடன் சேர்ந்து நடித்த ஸ்ரீமாந்துடு சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனால் ஸ்ருதிக்கும் டோலிவுட்டில் ஏக கிராக்கி.

சமந்தா
சமந்தா கோலிவுட் பக்கம் வந்த நேரம் கவர்ச்சியில் தாராளம் காட்டி முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை ராகுல் ப்ரீத் சிங் பெற்றுவிட்டார்.

ராகுல் ப்ரீத்
தமிழில் தொடர்ந்து நடித்தாலும் சமந்தாவின் மார்க்கெட் ஒன்றும் பெரிதாக இல்லை. இந்நிலையில் தெலுங்கு திரையுலகிலும் அவர் நிலைமை சரியில்லை. இந்த சூழலில் டோலிவுட்டின் பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்பை பெற சமந்தா, ராகுல் ப்ரீத் இடையே ஒரே கவர்ச்சி சண்டையாக இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











