இதுக்குள்ள 2 படம் முடிஞ்சிருக்கும், ஷுட்டிங் எப்ப தொடங்குவாங்கன்னு தெரியலையே? பிரபல ஹீரோயின் கவலை
சென்னை: தான் நடிக்க வேண்டிய படங்களின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை என நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழில் யுவன், தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட சில படங்களில் நடித்தவர், ரகுல் பிரீத் சிங்.
இப்போது ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா
தெலுங்கிலும் நடித்துவரும் ரகுல் பிரீத் சிங், அடுத்து இந்தியில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படங்களின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்கின்றனர். சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப் பட்டுள்ளன.

கால்ஷீட் விவகாரம்
இதனால், நடிகர், நடிகைகளின் கால்ஷீட் கண்டபடி சிக்கலில் சிக்கி இருக்கிறது. மொத்த திட்டமும் சிதைந்து போனதில் நடிகர், நடிகைகள் குழப்பத்தில் உள்ளனர். லாக்டவுன் முடிந்து படப்பிடிப்புத் தொடங்கப்பட்டால், கால்ஷீட் விவகாரம் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இந்நிலையில், நடிகை ரகுல் பிரீத் சிங், தனது மொத்த திட்டமும் சொதப்பி விட்டதாகக் கூறியுள்ளார்.

அர்ஜூன் கபூர்
இதுபற்றி அவர் கூறும்போது, லாக்டவுன் அறிவிக்கப்படும்போது, ஜான் ஆபிரகாமுடன் அட்டாக் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். இன்னொரு படம் அர்ஜூன் கபூருடன். இந்த படங்களுக்கு ஒரு மாதம் கால்ஷீட் ஒதுக்கி இருந்தேன். மார்ச் மாதம் ஐரோப்பாவில் ஷூட்டிங் இருந்தது. அதற்காக டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. அர்ஜூன் கபூருடன் நடிக்கும் படத்துக்கு ஒருவாரம் மட்டுமே ஷூட்டிங் பாக்கி. எல்லாம் சிக்கலாகி விட்டது. இனி எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை.

தெரியவில்லை
அடுத்து ஏப்ரல் மாதம் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அஜய்தேவ்கன் நடிக்கும் படங்களில் நடிக்க இருந்தேன். ஆகஸ்ட் மாதம் வேறொரு படம். இந்த படங்கள் எல்லாம் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை, எப்படி கால்ஷீட்டை பிரித்துக் கொடுக்கப் போகிறேன் என்றும் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











