ஆளானப்பட்ட நயன்தாராவுக்கே ரூ. 3 கோடி தான்: ரகுல் ப்ரீத் சிங் வருத்தம்
Recommended Video

சென்னை: ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் தருவது இல்லை என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் ஒரு ஹிட் கிடைக்காதா என்று ஏங்கிய ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தீரன் அதிகாரம் ஒன்று படம் கைகொடுத்துள்ளது. படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால் அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில் ஹீரோயின்களின் சம்பளம் பற்றி ரகுல் கூறியிருப்பதாவது,

சம்பளம்
நயன்தாரா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் நடிக்கும் படங்கள் ஹிட்டாகின்றன. ஆனால் அவருக்கு ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் கொடுப்பது இல்லை.

ஹீரோ
வெற்றி நாயகியான நயன்தாராவுக்கு படத்திற்கு ரூ. 3 கோடி சம்பளம் கொடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஹீரோக்களுக்கோ ரூ. 15 கோடி சம்பளம் கொடுக்கிறார்கள்.

பாரபட்சம்
திரையுலகம் ஆணாதிக்கம் மிக்கதாக உள்ளது. ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் தர மறுக்கிறார்கள் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

வேண்டாம்
தன்னை யாரும் நயன்தாராவுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று ரகுல் ப்ரீத் கேட்டுக் கொண்டுள்ளார். நயன்தாரா ரொம்ப சீனியர் அவரை முன்மாதிரியாக கொண்டு நடிக்கிறேன் என்றார் ரகுல் ப்ரீத் சிங்.


Click it and Unblock the Notifications











