»   »  'சூர்யா 36'ல் கார்த்தி ஹீரோயின்: கடுப்பில் தனுஷ் நாயகி

'சூர்யா 36'ல் கார்த்தி ஹீரோயின்: கடுப்பில் தனுஷ் நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil
கார்த்தி ஹீரோயின் மீது கடுப்பில் இருக்கும் சூர்யா ஹீரோயின்- வீடியோ

சென்னை: சூர்யா 36 படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது சாய் பல்லவியை கடுப்படைய வைத்துள்ளதாம்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார். தற்போதைக்கு சூர்யா 36 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் மேலும் ஒரு ஹீரோயின் வந்துள்ளார்.

ஹீரோயின்

ஹீரோயின்

சூர்யா 36 படத்தின் மற்றொரு ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தம்பி கார்த்தியை அடுத்து அண்ணன் சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார் ரகுல்.

சாய் பல்லவி

சாய் பல்லவி

சூர்யா 36 படத்தின் முக்கியமான ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங்காம். சாய் பல்லவி பிளாஷ்பேக்கில் மட்டும் வருவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

கடுப்பு

கடுப்பு

தெலுங்கு திரையுலகில் ரகுல் ப்ரீத், சாய் பல்லவி பிரபலமான நடிகைகள். இந்நிலையில் சூர்யா 36 படத்தில் ரகுலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது சாய் பல்லவியை கடுப்பாக்கியுள்ளதாம்.

அதிசயம்

அதிசயம்

சாய் பல்லவி ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதே பெரிய விஷயமாக உள்ளது. ஆயிரத்தெட்டு கன்டிஷன் போடுகிறார் என்று தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள். இந்நிலையில் அவர் கடுப்படைந்துள்ளார்.

மாரி 2

மாரி 2

தனுஷின் மாரி 2 படத்தின் ஹீரோயின் சாய் பல்லவி தான். அந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாரும் உள்ளார். அந்த படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

English summary
Rakul Preet Singh has signed Suriya 36 to be directed by Selvaraghavan. Sai Pallavi is reportedly upset after Rakul Preet Singh comes aboard as the latter's character is more important than the former's.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X