இந்தி வாய்ப்பா குவியுதே? இளம் ஹீரோ ஜோடியாக.. மற்றொரு படத்தில் கமிட் ஆன பிரபல ஹீரோயின்!
சென்னை: பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் மற்றொரு இந்தி படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தமிழில், தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார், ரகுல் பிரீத் சிங்.
இப்போது, சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

போதைப் பொருள்
தமிழ் தவிர தெலுங்கு, இந்தியிலும் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். அவருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் ஆகியோருடன் ரகுல் பிரீத் சிங்கும் விசாரிக்கப்பட்டார். ஆனால், தனக்கும் போதை பொருளுக்கும் தொடர்பில்லை என்றார் ரகுல்.

சர்தார் அண்ட் கிராண்ட்சன்
சமீபத்தில், மாலத்தீவு சென்றிருந்த அவர், அங்கிருந்து தினமும் சில புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வந்தார். அது வைரலானது. நடிகை ரகுல் பிரீத் இந்தியில் அர்ஜுன் கபூர் ஜோடியாக சர்தார் அண்ட் கிராண்ட்சன் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

அஜய் தேவ்கன்
அடுத்து பிரபல பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கன் நடிக்கும் மே டே என்ற இந்திப் படத்தில் நடிக்கிறார். இதில், அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதை அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரகுல் பிரீத், சமீபத்தில் அதில் இருந்து மீண்டார்.

தேங்க் காட்
இதையடுத்து மே டே ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. இதையடுத்து அஜய்தேவ் ஜோடியாக தேங்க் காட் என்ற படத்திலும் சமீபத்தில் ஒப்பந்தம் ஆனார். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கு முன், அட்டாக் என்ற படத்தில் ஜான் அபிரகாம் ஜோடியாக நடித்து வருகிரார்.

ஆயுஷ்மன் குரானா
இப்போது மற்றொரு பாலிவுட் படத்திலும் அவர் நடிக்கிறார். டாக்டர் ஜி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், அயுஷ்மன் குரானா ஹீரோவாக நடிக்கிறார். அனுபுதி காஷ்யப் இயக்கும் இந்தப் படத்தில் அவர் மருத்துவ மாணவியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார், ரகுல் பிரீத் சிங்.


Click it and Unblock the Notifications











