வெகேஷன்னாலும் ஒர்க் அவுட் முக்கியம்ல.. வில்லாக வளைந்து வைட்டமின் டி தேடும் பிரபல ஹீரோயின்!
சென்னை: வில்லாக வளையும் பிரபல நடிகை வெளிநாட்டு பீச்சில் நின்றபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழில் தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று உட்பட சில படங்களில் நடித்தவர், ரகுல் பிரீத் சிங்.
சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்பு இல்லை
தெலுங்கு மற்றும் இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். அவருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் ஆகியோருடன் ரகுல் பிரீத் சிங்கும் விசாரிக்கப்பட்டார். ஆனால், தனக்கும் போதை பொருளுக்கும் தொடர்பில்லை என்றார் ரகுல்.

ஸ்பெஷல் ஸ்பாட்
தெலுங்கு பட ஷூட்டிங் முடிந்த கையோடு ஹாலிடேவுக்காக குடும்பத்துடன் மாலத்தீவு சென்றிருக்கிறார், ரகுல் பிரீத். மாலத்தீவை தங்களின் ஸ்பெஷல் ஹாலிடே ஸ்பாட் ஆக்கிவிட்டார்கள், நம் ஹீரோயின்கள்.

ஒர்க் அவுட் அடிக்ட்
ஏற்கனவே காஜல் அகர்வால், வேதிகா, பிரணிதா, மௌனி ராய், மந்திரா பேடி, டாப்ஸி என பலர் அங்கு சென்று வந்தனர், சமீபத்தில். அங்கிருந்து பிகினி அணிந்தபடி உள்ள பல புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் அவர்கள் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில்தான் ஒர்க் அவுட் அடிக்ட் நடிகை ரகுல் பிரீத் சிங் அங்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார்,

வில்லாக வளைத்து
அங்கிருந்து தினமும் ஒரு போட்டோவை பதிவிடும் அவர் இப்போது வித்தியாசமான போட்டோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். அதில் கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து போஸ் கொடுத்துள்ளார் ரகுல் பிரீத். அதற்கு கேப்ஷனாக, கடலில் இருந்து வைட்டமின் டி பெறுகிறேன் என்று கூறியுள்ளார்.
Recommended Video

இப்படி பொசிஷன்ல
இதற்கு #nevermissaworkout என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளார். இதை லட்சக்கணக்கான நெட்டிசன்ஸ் லைக் செய்துள்ளனர். ஏராளமானவர்கள் கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். ஒருவர், வைட்டமின் டி -க்காக ஏன் இப்படியொரு பொசிஷன்ல சன்பாத் பண்ணணும்? என்று கேட்டுள்ளார். சிலர் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











