twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா நோயாளிகள் என்ன சாப்பிடலாம்… நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சிம்பிள் டிப்ஸ் !

    |

    மும்பை : நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா நோயாளிகள் உட்கொள்ளவேண்டிய உணவு குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    Recommended Video

    பல்ஸ் ஆக்சிமீட்டர் எப்படி பயன்படுத்துவது.. அழகாக சொல்லிக்கொடுக்கும் பூஜா ஹெக்டே - வீடியோ

    பிரபலமான உடற்பயிற்சி ஆர்வலரான ரகுல் ப்ரீத் சிங், அவ்வப்போது அவர் தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோ பதிவிடுவார்.

    வறுமையால் விருதுகளை விற்ற காமெடி நடிகை... கைகொடுத்த தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வறுமையால் விருதுகளை விற்ற காமெடி நடிகை... கைகொடுத்த தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி

    இதனால் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    அறிமுகம்

    அறிமுகம்

    யுவன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இப்படத்தைத் தொடந்து தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். எனினும், இந்தப்படங்களுக்கு ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.

    பெயர் எடுத்தார்

    பெயர் எடுத்தார்

    இந்நிலையில், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் மாஸ் ஹிட்டடித்தது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் கார்த்தியுடன் இணைந்து தேவ் படத்தில் நடித்தார். காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தஇப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.

    உணவு முறை

    உணவு முறை

    இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொரோனா நோயாளிகள் எந்த மாதிரியான உணவு எடுத்துக்கொள்ளலாம் என்பதை விளக்கி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "நீங்கள் கோவிட் -19 உடன் போராடுகிறீர்களா, வலுவாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள் என்று இதற்கு தலைப்பிட்டுள்ளார்.

    சூப் பருகுங்கள்

    சூப் பருகுங்கள்

    அதிக கலோரியுடைய உணவை தவிர்த்துடுங்கள், பால், வறுத்த மற்றும் உறைந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள், ஆரோக்கியமான மற்றும் ஊட்டமளிக்கும் உணவுகளை உண்ணுங்கள், அதிக திரவங்களை உட்கொள்ளுங்கள், சூடான தேநீர், சூப்களை அதிகம் பருகுங்கள், கசப்பான சுவை காய்கறிகளை உட்கொள்ளுங்கள் என அந்த வீடியோவில் ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.அதிக கலோரியுடைய உணவை தவிர்த்துடுங்கள், பால், வறுத்த மற்றும் உறைந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள், ஆரோக்கியமான மற்றும் ஊட்டமளிக்கும் உணவுகளை உண்ணுங்கள், அதிக திரவங்களை உட்கொள்ளுங்கள், சூடான தேநீர், சூப்களை அதிகம் பருகுங்கள், கசப்பான சுவை காய்கறிகளை உட்கொள்ளுங்கள் அந்த வீடியோவில் ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

    English summary
    Rakul Preet Singh on the importance of nutrition in COVID-19 patients
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X